இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், முஸ்லிம்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, “நீதி கேட்டு நெடும்பயணம்” என்ற தலைப்பில், ஜனவரி 30ஆம் தேதி துவங்கி, இம்மாதம் 13ஆம் தேதி வரை தொடர் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று காலையில், காயல்பட்டினம் வந்தடைந்த பயணக்குழு, வள்ளல் சீதக்காதி திடலில் பொதுமக்கள் திரளிடையே பரப்புரை நிகழ்ச்சியை நடத்தியது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு நின்று உரைகளை அவதானித்தனர்.
படங்கள்:
A.K.இம்ரான் |