தமிழக அரசு - குற்றங்களை தடுக்க, பொது மக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களில் CCTV பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்த சட்டம்
(The Tamil Nadu Urban Local Bodies (Installation of Closed Circuit Television
Units in Public Buildings) Rules 2012) டிசம்பர் 14, 2012 அன்று பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள், கட்டிட உரிமையாளர்கள் - CCTV கருவிகளை
பொருத்திட வேண்டும். இவ்விதி - மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் மட்டும் பொருந்தும்.
புதிய சட்டத்தின்படி - கீழ்க்காணும் இடங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டிடங்களாக (PUBLIC BUILDINGS) கருதப்படும்:
(1) பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் (தனியார் உட்பட)
(2) 100 பேருக்கு மேல் தங்கும் விடுதிகள் (hostels)
(3) 500 சதுர மீட்டருக்கு மேலான இடம்கொண்ட அனைத்து விதமான மருத்துவ மனைகள்
(4) பயணியர் தங்கும் விடுதிகள்/நட்சத்திர ஹோட்டல்கள்
(5) திருமண மண்டபங்கள் / சத்திரங்கள்
(6) திரை அரங்குகள், கேளிக்கை பூங்கா, நீச்சல் குளம், பொழுதுபோக்கு மையம், கூட்ட அரங்குகள், கேளரங்கம், பொருட்காட்சி, மியூசியம்,
விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நடன அரங்குகள், மதுபான கடைகள் போன்றவை
(7) 500 சதுர மீட்டருக்கு மேலான இடம்கொண்ட மொத்த (Wholesale) மற்றும் சில்லறை (Retail) வியாபார கடைகள்
(8) வங்கிகள், ATM அறைகள், காப்புறுதி (Insurance) அலுவலகங்கள்
(9) நகைக்கடை
(10) பண்கடை கட்டிடம் (Shopping Mall/Multiplex)
(11) பெட்ரோல் பங்க்
(12) 100 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள்
(13) தகவல் தொழில் நுட்பம் (IT), ரேடியோ மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள்
(14) ஒரே நேரத்தில் 500 பேருக்கு மேல் கூடும் மத வழிபாட்டுத்தலம்
(15) 100 பேருக்கு மேல் பணிபுரியும் அல்லது 500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அரசு கட்டிடங்கள்
(16) 100 பேருக்கு மேல் பணிபுரியும் அல்லது 500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அரசு சார்ந்த நிறுவனங்களின் (quasi) கட்டிடங்கள்
(17) 500 சதுர மீட்டருக்கு மேலான இடம் கொண்ட நூலகம், சொற்பொழிவு அரங்கம், கச்சேரி அரங்கம், அனைத்து வகையான உணவு விடுதிகள்
(18) பேருந்து நிலையம்
இவைகளை தவிர Deputy Superintendent of Police / Assistant Commissioner of Police தகுதிகளுக்கு குறையாத போலீஸ் அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட
ஆட்சியர் அறிவிக்கும் - வழிபாட்டுக்கு/அரசியலுக்கு/பொது விசயங்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து கட்டிடங்களிலும் CCTV கருவி
பொருத்தப்படவேண்டும்.
300 சதுர மீட்டர் பரப்பளவுக்கு ஒரு CCTV கருவி என்ற கணக்கில் கருவிகள் பொருத்தப்படவேண்டும்.
கருவிகள் - நுழைவுவாசல், வெளிசெல் வழி, நடைக்கூடம், வரவேற்ப்பறை போன்ற - இடங்களில் மக்கள் நடமாற்றதை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட வேண்டும்.
புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் - CCTV கருவிக்கான இடங்களை, தங்கள் கட்டிடப்பணி வரைப்படங்களில் குறிப்பிட்டு காட்ட வேண்டும்.
நகராட்சிகளின் ஆணையர் / செயல் அலுவலர் - கட்டிடங்களுக்கு உரிமங்கள் வழங்குவதற்கு முன், CCTV கருவிகள் பொருத்த வழிவகுக்கப்பட்டு இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்யவேண்டும்.
பழைய கட்டிடங்களில் - இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், CCTV கருவிகளை பொறுத்த வேண்டும்.
இந்த விதிமுறைகள் - தமிழக அரசின் கெசட்டில் டிசம்பர் 14, 2012 அன்று வெளியிடப்பட்டது.
இந்த விதிமுறைகளை முழுவதுமாக காண இங்கு அழுத்தவும். |