உரக்கிடங்கு அமைக்க ஐக்கியப் பேரவை தரும் நிலத்தைப் பார்வையிட வருமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாங்கள் 01-02-2013 அன்று காயல்பட்டினம் வந்து உரகிடங்கு அமைத்திட 5 ஏக்கர் நிலம் சிலவற்றை பார்த்து சென்றதாக அறிகிறோம்.
சுமார் 1 மாதத்திற்கு முன்னாள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை முயற்சியால் ஊர் நலன்கருதி சர்வே எண் 278-ல் 5 ஏக்கர் நிலம் தருவதாக சில ஆவணங்களை கொடுத்தார்கள்.
இதற்கு முன்னாள் இருந்த காயல்பட்டினம் செயல் அலுவலர்கள் இந்த இடத்தைவிட்டால் வேறுஇடம் காயல்பட்டினம் எல்லைக்குள் கிடைக்காது என்று எழுதிய கடித நகலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், குப்பை கொட்டுவதற்கு வசதியான இடமாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.
எனவே எங்களது வேண்டுகோள் தாங்கள் ஒருமுறை இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு முடிவு செய்யலாம் என்பதே.
இவ்வாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இம்மாதம் 04ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ரெங்கநாதன் என்ற சுகு, அஜ்வாது, சாமி, ஆகியோர், நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் இக்கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர். |