தற்காலத் தேவையைக் கருத்திற்கொண்டு, நிர்வாகத்தை மறு சீரமைப்பு செய்யவும், சென்னை - மண்ணடியை மையமாகக் கொண்டு அமைப்பின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவும், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அனைத்துக் குழுக்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
KCGC-ன் அனைத்துக் குழுக்கள் ஆலோசனைக்கூட்டம்
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மய்யத்தின் அனைத்துக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்ற 09-02-2013 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, சென்னை - திருவல்லிக்கேணியிலுள்ள KCGC ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
சகோ.குளம் இப்ராஹீம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். துவக்கமாக சகோ. கிதுர் முஹ்யித்தீன் இறைமறை ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். சகோ. ஷமீமுல் இஸ்லாம் கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து அறிமுகவுரை வழங்கினார்.
பிறகு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது. அவை பின்வருமாறு:-
1) KCGC கமிட்டிகள் மறுசீரமைப்பு:
KCGCஇல் தற்போது இருந்து வரும் ஒருங்கிணைப்புக்குழு, கல்விக்குழு, வேலைவாய்ப்புக்குழு, மருத்துவக்குழு ஆகியன KCGC ஆரம்பிக்கப்பட்ட துவக்கத்தில் அன்றைய செயல்பாடுகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள நிலைப்படி தனிக்குழுக்களாக செயல்படுவதில் ஒரு குழுவிற்கும் மற்ற குழுவிற்கும் இடையில் பல்வேறு தகவல் இடைவெளிகள் உண்டாவதாலும் குழு வாரியான வேளைகள் செய்யப்படாமல் போனால் யார் அதைக் கேட்பது, யார் அதற்கு பொறுப்பேற்பது என்ற கேள்விகள் எழுவதாலும், அனைத்து குழுக்களும் ஒரே குழுவாக அமையும் போது இது போன்ற இடைவெளிகளை தவிர்க்க முடியும், மேலும் அனைத்து செயல்பாடுகளையும் துரிதப்படுத்தவும் வாய்ப்புகள் உண்டாகும் என்ற நோக்கத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒரே குழுவாக (Executive Body) அமைக்கலாம் எனவும், 20 நபர்களுக்கு குறையாமலும் 25 நபர்களுக்கு மிகாமலும் அக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் அடுத்து வரும் பொதுக்குழுவில் இம்முறைப்படி புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்த்தெடுக்கப்படுவார்கள் எனவும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.
2) தலைவர் செயலாளர் தேவை பற்றிய முடிவு:
KCGCக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற அடிப்படையில் இதுவரை பொறுப்பாளர்கள் அமைக்கப்படாமல் துவக்கப்பட்ட காலம் முதல் ஒருங்கிணைப்புக் குழு மூலமே செயல்பாடுகளை இயக்கி வந்த நிலையில் தற்போது தலைவர், செயலாளர், பொருளாளர் என தேர்வு செய்வதால் ஏற்படும் நண்மைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதன் விளைவாக இம்முறை சரியானதே எனவும், அவற்றிற்கான பொறுப்பாளர்களையும், வரும் பொதுக்குழுவில் தேர்வு செய்வது என ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது.
3) துணை விதிகள் (By-Law) குறித்த மீளாய்வு:
KCGCயை பதிவு செய்வதற்கு துணைவிதி (By-Law) அவசியம் எனவும் ஏற்கனவே அதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மாதிரி துணைவிதிகளை ஆய்வு செய்து தயாரித்து ஒப்படைக்க ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் அக்குழு வரும் பொதுக்குழு கூட்டத்திற்கு முன் அதை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. குழுவில் இடம்பெறுவோர் பின்வருமாறு:-
சகோ. ஆடிட்டர் ரிஃபாய் அவர்கள்
சகோ. வக்கீல் அஹ்மத் அவர்கள்
சகோ. ஸ்மார்ட் காதர் அவர்கள்
சகோ. M.S.சாலிஹ் அவர்கள்
சகோ. ஷமீமுல் இஸ்லாம் அவர்கள்
சகோ. குளம் முஹம்மது தம்பி அவர்கள்
ஆகியோர்.
4) மண்ணடியை மய்யமாக கொண்டு KCGC அலுவலகம்:
காயல் வாசிகள் அதிகமுள்ள மண்ணடியில் அலுவலகம் அமைப்பதுதான் நமது பணிகள் சிறப்பாக அமைய தோதுவாக இருக்கும் என்பதால் மண்ணடியிலேயே அலுவலகம் அமைக்க வேண்டும் என ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பை சகோ. S.M.I.ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
5) அடுத்த பொதுக்குழு தேதி பற்றிய முடிவு:
இன்ஷா அல்லாஹ் அடுத்த பொதுக்குழு கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
6) உறுப்பினர் சந்தா:
KCGCஇன் உறுப்பினர் சந்தாவை உறுப்பினர்களுள் சிலர் இன்னும் செலுத்தாமல் உள்ளபடியால் 2011-12 மற்றும் 2012-13 –க்கான சந்தாவை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்துமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
7) அடுத்த செயற்குழுக் கூட்டம்:
KCGCஇன் அடுத்த செயற்குழுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் மதிய உணவுடன் கூடிய கூட்டமாக வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
8) அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website):
KCGCஇன் இணையதளம் இம்மாதம் இறுதிக்குள் (பிப்ரவரி 28-க்குள்) செயல்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பை சகோ. நெட்காம் புஹாரி, சகோ. குளம் முஹம்மத் தம்பி ஆகியோர் மேற்கொள்வார்கள் என முடிவெடுக்கப்பட்டது.
9) வேலை தேடி வருவோருக்கு நேர்காணல்:
துபாய் காயல் நல மன்றத்திலிருந்து விடுக்கப்பட்ட - வேலை தேடி வருவோருக்கான நேர்காணல் செய்து, தகுதிகளை உறுதி செய்து அனுப்புவதற்கான கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வது என்றும் வரும் பொதுக்குழுவிற்குப் பின் அதற்கான முடிவுகளை முறையாக அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டோர் பெயர்கள் பின்வருமாறு:-
1) சகோ. குளம் முஹம்மத் இப்ராஹீம் அவர்கள்
2) சகோ. H.N.சதக்கத்துல்லாஹ் அவர்கள்
3) சகோ. M.S.அப்துல் காதர் (ஸ்மார்ட்) அவர்கள்
4) சகோ.M.T.முஹம்மத் அலி அவர்கள்
5) சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்கள்
6) சகோ.B.A.புஹாரி அவர்கள்
7) சகோ.V.M.I.சுலைமான் அவர்கள்
8) சகோ. M.N.M.அப்துல் காதர் (முத்துவாப்பா) அவர்கள்
9) சகோ.S.H.கிதுரு முஹ்யித்தீன் அவர்கள்
10) சகோ.M.S.சாலிஹ் அவர்கள்
11) சகோ.M.A.C.முஹம்மத் நூஹு அவர்கள்
12) சகோ.குளம் முஹம்மத் தம்பி அவர்கள்
13) சகோ.S.M.I.ஜகரிய்யா அவர்கள்
14) சகோ.முஹம்மத் முஃக்தார் அவர்கள்
15) சகோ. உமர் (Illume) அவர்கள்
16) சகோ.எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் அவர்கள்
ஆகியோர்.
இறுதியாக கஃபாராவுடன் கூட்டம் நிறைவடைந்தது. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சொளுக்கு முஹம்மத் நூஹ்
சென்னை |