திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தொடர்வண்டிகளில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குமாறு காயல்பட்டினம் பொதுமக்கள் தொடர்வண்டித் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26.01.2013 அன்று மாலை 06.00 மணியளவில், திருநெல்வேலி சந்திப்பு தொடர்வண்டி நிலையத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் தொடர்வண்டியில் காயல்பட்டினம் செல்வதற்காக, அந்த ஊரைச் சேர்ந்த - பெண்கள் உள்ளிட்ட சுமார் 15 பேர் காத்திருந்தனர்.
அப்போது கோயில் விசேஷம் காரணமாக தொடர்வண்டியில் பயணியர் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பெரும்பாலான பயணியர் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்த காரணத்தால், விபத்தையஞ்சிய காயல்பட்டினத்தைச் சேர்ந்த பயணியர் உட்பட பலர் தொடர்வண்டிப் பயணத்தைத் தவிர்த்து பேருந்து நிலையம் சென்று ஊர் திரும்பியுள்ளனர்.
தொடர்வண்டி நிலையத்திலிருந்து திரும்பும் முன், தென்னக ரெயில்வே நெல்லை சந்திப்பு தொடர்வண்டி நிலைய மேலாளரைச் சந்தித்து குறைகளைத் தெரிவித்த எம்.எச்.அப்துல் வாஹித், எம்.ஒய்.ஸலீம், ஏ.ஓ.அதாவுர்ரஹ்மான் உள்ளிட்டோரடங்கிய அப்பயணியர், இதுபோன்ற விழாக்காலங்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குவதன் மூலம் பயணியரின் அசவுகரித்தைப் போக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துவிட்டு திரும்பினர். |