தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கட்டண நிர்ணயம்க் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மே 2010 இல் - சுமார் 10,000 பள்ளிக்கூடங்களுக்கான - தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. கட்டண விபரங்கள் அக்டோபர் 2010 இல் வெளியிடப்பட்டது.
நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே 6400 பள்ளிகள் கட்டணத்தை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்தன. அந்த பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பள்ளிகளிடம் கட்டண குழு விசாரணை நடத்தியது. இதன்படி - ஜூன் 2011 இல் - 2013ம் ஆண்டு வரையிலுமான கட்டணம் நிர்ணையம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் தற்போது அரசு அங்கீகரித்துள்ள கட்டணங்களை காண இங்கு அழுத்தவும்.
தற்போது 2013ம் ஆண்டுக்கான கால வரம்பு முடிவடையும் நிலையில் உள்ளதால், 2013ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட 11600 பள்ளிகளுக்கு, 2014, 2015, 2016ம் ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
பள்ளிகளுக்கான வினா படிவங்களை கட்டண குழு பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட வினா படிவங்கள் கட்டண குழுவுக்கு வந்து சேர்ந்ததும், மார்ச் முதல் வாரத்தில் விசாரணை நடத்த கட்டணக் குழு திட்டமிட்டுள்ளது. தற்போது இக்குழுவுக்கு தலைவராக நீதிபதி எஸ்.ஆர் சிங்காரவேலு உள்ளார்.
1. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[13 February 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25492
அணைத்து பள்ளிகளில் சமசீர்க் கல்வி எப்படி நடைமுறைக்கு வந்ததோ,அதைப்போல அணைத்து பள்ளிக்கூடக்களுக்கும் கூடியவிரைவில் பள்ளிக்கூட கட்டணம் வசூல் செய்ய அரசு சட்டம் கொண்டுவரவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross