காயல்பட்டினம் நகராட்சியில் ஆடு, மாடு அறுப்பு கட்டணம் - பிப்ரவரி 1 முதல், ஆடு ஒன்றிற்கு ரூபாய் 40 என்றும், மாடு ஒன்றிற்கு ரூபாய் 50 என்றும் உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டண உயர்வை கண்டித்து வியாபாரிகள் பிப்ரவரி 1 அன்று நகரில் கடையடைப்பு நடத்தினர்.
இதனை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டம் பிப்ரவரி 5 அன்று காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பின், ஆடு அறுக்க கட்டணம் ரூபாய் 20 என்றும், மாடு அறுக்க கட்டணம் ரூபாய் 30 என்றும் நிர்ணையம் செய்யப்பட்டது.
1. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[15 February 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25524
ஆடு,மாடு அறுப்பு கட்டணம் குறைக்க மட்டும் அவசர கூட்டம் போட்டால் மட்டும் போதாது,
ஆடு,மாடுகளை முறையாக அறுக்கும் இடத்தில அறுக்காமல் கடல் கரையிலும், காட்டுமொகுதூம் பள்ளிக்கு பின்னல் உள்ள தோட்டதிலும், இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அந்தந்த கடைக்கு பின்னல் உள்ள காலியான இடத்திலும் அறுத்து விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த கூட்டம் போட்டு இருக்கலாமே?
இந்தமாதிரி நகரமன்றதிற்கு தெரியாமல் அறுக்கப்படும்
இந்த கால்நடைகள் உயுருடன் இருக்கிறாத என்பது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.
கண்ணியத்துக்குரிய நகரமன்ற, தலைவி, எனது அன்பு உடன்
பிறவா அணைத்து வார்டு உறுபினர்களே ஆடு,மாடு கட்டாய அடிப்படையில் நகரமன்றம் டிப்போவில் கொண்டுவந்து அறுக்க திவிர நடவடிக்கை எடுக்கவும்.
2. Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[15 February 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25526
அல்ஹம்து லில்லாஹ்!
நல்லது நடந்தால் சரிதான்!
ஆனாலும்,பொதுமக்கள் நிலையில் நின்று பார்த்தால்,
இதுவே விலை கூடுதல்தான்!
இன்னும் குறைக்க என்ன வழியோ அதைப் பாருங்கள்.
காரணம், பாதிக்கப்படுவது நடுத்தரவாதிகளே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross