அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
காயல்பட்டினத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (பிப்.15) மழை பெய்தது. காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரை சாரல் மழை பெய்து வந்தது. பகல் முழுவதும் சூரிய வெளிச்சம் தென்படவில்லை. பகல் 12:00 மணி முதல் தூரல் நின்ற போதிலும் வானம் மேகமூட்டமாகவும் மப்பும் மந்தாரமாகவும் இருந்தது.
ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளிக்கு முன் தண்ணீர் தேங்கியுள்ள படியால் தொழுகைக்கு போவோர் வருவோர் சிரமத்திற்குள்ளாயினர்.
மழைக்குப் பின்பான நகரின் பல்வேறு பகுதிகளது காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
நகர வானிலை குறித்த செய்திகளை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். |