தமிழகத்தில் பல உள்ளாட்சி மன்றங்கள் - 2010 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் தகுதி உயர்த்தப்பட்டன. காயல்பட்டினம் நகராட்சி - இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் - நகராட்சிகளின் தரத்திற்கு ஏற்றவாறு - புது பணியிடங்களுக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கு பணியிடங்கள் உருவாக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) - தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் போதிய இடங்கள் வழங்கப்படாததால் உள்ளாட்சி மன்றங்களின் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து தற்போது தமிழக அரசு - 27 நகராட்சிகளில், 124 பணியிடங்களை உருவாக்க அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்த பிப்ரவரி 13 தேதியிட்ட அரசு ஆணையை (எண் 30), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சி.வி.சங்கர் IAS (பொறுப்பு) வெளியிட்டார்.
இதன்படி காயல்பட்டினம் நகராட்சியில் கீழ்க்காணும் பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
(1) Manager (Class IV)
(2) Municipal Engineer (Grade III)
(3) Work Inspector
(4) Revenue Inspector
(5) Town Planning Inspector
தகவல்:
ஐ. ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
|