தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 65 வது பிறந்த நாளை (பிப்ரவரி 24) முன்னிட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இம்முகாமில் தமிழக தொழிற்துறை அமைச்சர் சி.தா. செல்லபாண்டியன் கலந்துக்கொண்டார். மாவட்ட அம்மா பேரவை செயலர் க. விஜயகுமார் தலைமையேற்றார். இம்முகாமின் போது அமைச்சர் உட்பட பலர் ரத்த தானம் செய்தனர்.
1. அவசர நேரங்களில் எங்கே போகிறார்கள்???? posted byKAJA NIJAMUDEEN (BANGALORE)[17 February 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 25575
யாருக்காவது ஆபரேஷன் இரத்தம் தேவைபடுகிறது என்றால் இவர்கள் ஏன் தானம் செய்ய வருவதில்லை? இவர்கள் எங்கே போகிறார்கள்? அவசர காலங்களில் ஏன் இவர்கள் இரத்த தானம் செய்ய முன் வருவதில்லை?
2. நல்லவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[18 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25576
இது அதிமுகவின் ஒரு பிரிவான அம்மா(ஜெயா)பேரவையினர் மட்டுமல்ல இதில் கனிசமான பங்கு நம் துடிப்பு மிக்க இளைஞர்களான காக்கும் கரங்கள் அமைப்பினரைச் சாரும். வந்தவர்கள் அதிமுகவினர் மட்டுமல்ல நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான்! நமதூரில் இரத்த வங்கி (ப்ளட் பேங்க்) கொண்டு வருவதற்காக காக்கும் கரங்கள் முயற்சி செய்து வருகின்றனர். எனவேதாம் அரசின் கவனத்தை ஈர்க்க அவர்களும் இதில் கைகோர்த்துள்ளனர்.
நம்மவர்கள் எங்கேயும் போய்விடவில்லை! இங்கே நம்மோடு தான் இருக்கின்றனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் காத்திருக்கின்றனர். பலருக்கும் பல்வேறு கட்டங்களில் இரத்ததானம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
3. Re:... posted byP.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.)[18 February 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25577
நானும் ஊரில் இருந்துஇருந்தால் ரத்ததானத்தை கண்டு இருப்பேன்.
ஊரில் இல்லாமல் இருந்தும்,ஊரில் இருப்பதாகவே கட்சி நோட்டீஸ்யில் எனது பெயர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
4. இரத்ததான முகாம்,,,, posted byNIZAR (KAYALPATNAM)[18 February 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25610
முதலமைச்சரின் 65 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவையின் மூலம் நமது அரசு மருத்துவ மனையில் நடந்த இரத்ததான முகாமில் கட்சி வேறுபாடின்றி அணைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது மிகுந்த வரவேற்கதக்கதாகும்.
இந்த அரசு மருத்துவ மனையின் OP BLOCK
அதாவது OUT PATIENT பிளாக் ஆனது மிகவும்
பழையதும்,மருத்துவமனை ஆரம்பிக்கும்பொழுது உருவாக்க பட்ட அதே சூழ்நிலையில் வசதியற்ற நிலையில் இன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தில் டாக்டர் ரூம்,மருந்துபிரிவு,ஊசி போடும் ரூம்,மருந்து கட்டு ரூம் என அணைத்து முக்கிய பிரிவும் இயங்கிவருகிறது.அனால் இந்த கட்டிடம் கான்க்ரீட் இல்லாத மேற்கூரை ஓட்டில் மேயபட்டுள்ளது.
மிகவும் பழமையானதான இந்த கட்டிடம் அசாதாரண சூழ்நிலையில் தரைகள் சிதைந்து பழைய பூத் பங்களா போல உள்ளது.இன்றைய காலத்துட்கு ஏற்ப இன்றைய அரசு நவீன வசதியுடன் இந்த கட்டிடத்தை கட்டினால் பொதுமக்களுக்கு மிகுந்த சந்தோசமும்,மருத்துவமனையும் தரமுள்ளதாக அமையும்.
எனவே நம் ஊரு ஆளுங்கட்சி நிர்வாகிகள் அமைச்சர் அவர்களிடத்தில் நமது மருத்துமனை வசதிகளை மேம்படுத்த கோரிக்கைகளை வழங்கி வலியுறுத்த வேண்டும்.நம் சகோதரர்கள் சுயநல மில்லாமல் சேவை மனப்பான்மையோடு இரத்ததானம் வழங்கியது நெஞ்சை தொடும் நிகழ்வாக இருந்தது.
அமைச்சர் கலந்து கொண்டும்,எந்த புதிய நல திட்டங்கள் நமது மருத்துமனைக்கு இந்த நிகழ்ச்சியில் அறிவிக்காமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.நம் ஊரில் முந்தய காலங்களில் இரத்ததான கழகங்கள் சிறப்பாக நடைபெற்று மாவட்டத்திலேயே முதன்மையாக திகழ்ந்து வந்தது.அனால் ஏதோ சில ஒற்றுமை குறைவினால் இன்று எதுமே சிறப்பாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இதை போன்ற பொது நல பணிகளில்
இளைஞ்சர்கள் செயல்பட்டு மீண்டும் இரத்ததான கழகம் சிறப்பாக செயல்பட முயற்சி செய்யவேண்டும்.இரத்த வங்கி நம் மாவட்டத்தில் தூத்து குடியில் மட்டும் தான் உள்ளது.
இதனால் அவசர தேவைக்கு மிகவும் அவதிப்படவேண்டி உள்ளது.
மாவட்டத்தில் தாலுகா அளவிலாவது இரத்த வங்கியை தமிழக அரசு ஏற்படுத்தி இரத்தம் வழங்குவதற்கும் அவசர நேரத்தில் பெறுவதற்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் மக்கள் அடையும் சந்தோசத்துக்கும்,பயன்பாட்டுக்கும் எல்லையே இல்லை எனலாம்.வரும் காலங்களில் நிறைந்த வசதிகளை நமது மருத்துவமனை பெற வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross