காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், ‘அழைப்பாளன்’ என்ற தலைப்பில் தர்பிய்யா - பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தஃவா சென்டர் சார்பில் நடத்தப்பட்டு வரும் தர்பிய்யா பயிற்சி வகுப்பு - இரண்டாவது பிரிவிற்கு, இஸ்லாமிய அழைப்புப் பணி குறித்து இதுவரை ஆறு வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது வகுப்பு 17.02.2013 அன்று நடைபெற்றது. இவ்வகுப்பில், ‘இந்து மதம் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் - சென்னையைச் சேர்ந்த குருசாமி என்ற முஹம்மத் அமீருத்தீன் சிறப்புரையாற்றினார்.
அன்று மதியம் மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி, அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை மனனம் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த படி, அன்று மாலை 05.00 மணியளவில் "மனம் புரிந்து நட" என்ற தலைப்பில் சிறப்பு தர்பிய்யா நிகழ்ச்சி மகளிருக்காக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குருசாமி என்ற முஹம்மத் அமீருத்தீன், அடியானிடம் அல்லாஹ் எதிர்பார்ப்பதென்ன என்ற தலைப்பில் அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
அடுத்த தர்பிய்யா நிகழ்ச்சி, வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெறுமெனவும், விபரம் பின்னர் அறியத்தரப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |