காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில், ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 01 முதல் 14 வரை, மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவாக கந்தூரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
அதனடிப்படையில், நடப்பாண்டு கந்தூரி நிகழ்ச்சிகள் இம்மாதம் 12ஆம் தேதியன்று துவங்கி, 24ஆம் தேதியுடன் நிறைவுறுகிறது. இந்நாட்களில் தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுவதுடன், மவ்லித் மஜ்லிஸும் நடைபெறுகிறது.
15.02.2013 தேதி வெள்ளிக்கிழமை முதல் 23.02.2013 சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 08.45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
24.02.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும், இரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை துஆ பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
25.02.2013 திங்கட்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஃபாத்திஹா துஆவுடன் நேர்ச்சை வினியோகம் துவங்கி, காலை 08.30 மணிக்கு நிறைவடைகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஹ்ழரா நிர்வாகிகளும், கந்தூரி கமிட்டி நிர்வாகிகளுமான ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர். |