விளையாட்டுத் துறையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்குடன் துவக்கப்பட்டு, ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்டிங் க்ளப் சார்பில், வழமை போல இவ்வாண்டு, வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து மற்றும் க்ரிக்கெட் விளையாட்டு சுற்றுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டியில், ஓரணிக்கு 7 வீரர்கள் என்றும், க்ரிக்கெட் போட்டியில் ஜூனியர் - ஓரணிக்கு 7 பேரும், சீனியர் ஓரணிக்கு 9 பேரும் விளையாடும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜூனியர் பிரிவின் கீழ், பள்ளிக்கூடங்களில் 07 முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை வீரர்களாகக் கொண்டு, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் எழுவர் கால்பந்து போட்டியும், எழுவர் க்ரிக்கெட் போட்டியும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
சீனியர் பிரிவின் கீழ், எழுவர் கால்பந்து போட்டியும், 9 வீரர்கள் பங்கேற்கும் க்ரிக்கெட் போட்டியும் வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. சீனியர் கால்பந்து சுற்றுப் போட்டியில் 12 அணிகளும், க்ரிக்கெட் போட்டியில் 8 அணிகளும் பங்கேற்கவுள்ளன.
அணிகளைக் கொள்முதல் செய்ய விரும்பும் உரிமையாளர்கள், அதுகுறித்த மேலதிக விபரங்களை,
காயல்பட்டினத்தில்...
எம்.ஜஹாங்கீர் (கைபேசி எண்: +91 99945 44632)
சொளுக்கு (கைபேசி எண்: +91 98427 83160)
ஆகியோரிடமும்,
ஐக்கிய அரபு அமீரகத்தில்,
அலாவுத்தீன் (கைபேசி எண்: +971 50 344 1670)
என்பவரிடமும்,
ஹாங்காங்கில்,
அலீ ஃபைஸல் (கைபேசி எண்: +852 9754 0095)
என்பவரிடமும் தொடர்புகொண்டு கேட்டறியலாம் எனவும், மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள விரும்புவோர், info@vunited.org என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என்றும் வி-யுனைட்டெட் நிர்வாகம் சார்பில், அதன் நிறுவனர் அலீ ஃபைஸல் தெரிவித்துள்ளார். |