காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாள் விழா, இம்மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு, கட்சிக் கொடியேற்றி சிறப்புரையாற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பசுமைப் புரட்சி திட்டத்தின் கீழ், 65 மரக்கன்றுகள் நகரின் பல்வேறு பகுதிகளில் நட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துவக்கி வைக்கவுள்ளார்.
விழா ஏற்பாடுகளை, நகர அதிமுகவினர் செய்து வருகின்றனர். |