இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், இம்மாதம் 16ஆம் தேதியன்று திண்டுக்கல் - பேகம்பூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர்களுள் ஒருவராக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ உட்பட 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம், மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், இம்மாதம் 16ஆம் தேதியன்று, திண்டுக்கல் - பேகம்பூரில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர்களாக 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டதிட்ட திருத்தத்தின் படி தேசிய கவுன்சில் கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனைப் பின்பற்றி, சட்ட விதி 8-இ பிரிவின் படி தமிழ்நாடு மாநில அமைப்பிலும் மாற்றம் செய்வது என திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் படி, மாநில துணைச் செயலாளர்களாக,
1. தென்காசி வி.டி.எஸ்.ஆர்.முஹம்மது இஸ்மாயில்
2. திண்டுக்கல் கே.ஏ. ஷபீர் அஹமது
3. மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்
4. வாணியம்பாடி நரி முஹம்மது நயீம்
5. திருச்சி ஜி.எம். ஹாஷிம்
6. ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ்
7. காயல்பட்டினம் எஸ்.ஏ.இப்ராஹீம் மக்கீ
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினம் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், பின்னர் மாநில தணிக்கைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிதாக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 09:58 / 19.02.2013] |