காயல்பட்டினத்தில் பல தெருக்களில் புதிய சாலை அமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. ஆஸாத் தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக கடந்த மாதமே பள்ளம் தோண்டப்பட்டது. எனினும், இன்று வரை புதிய சாலை அமைக்கப்படாமல், தோண்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.
சாலை தோண்டப்பட்டு பல நாட்களாகியும் புதிய சாலை போடப்படாததால், அப்பகுதி பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்குக் கூட வழி தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் காயல்பட்டினத்தில் பெய்த மழை காரணமாக, தோண்டப்பட்ட இச்சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் ‘பாரம்பரிய’ முறைப்படி காகித ஓடத்தை மிதக்கவிட்டு விளையாடி வருகின்றனர்.
புதிய சாலை அமைப்புப் பணிகளுக்காக காயல்பட்டினத்தில் பல சாலைகள் முறைப்படி தோண்டப்படவில்லை என்றும், முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - காயல்பட்டினம் கிளை சார்பில் இம்மாதம் 04ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |