காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்து காயல்பட்டின மக்களின் எதிர்ப்பு மத்திய -
மாநில அரசு துறைகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே - பிப்ரவரி 7 வியாழன் அன்று - ஆறுமுகநேரி கே.டி.கோசல்ராம் திருமண
மண்டபத்தில் - DCW தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினை நகர் நல மன்றம்,
ஆறுமுகநேரி என்ற அமைப்பு செய்திருந்தது. அக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1. Re:... posted byKader K.M (Dubai)[16 February 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25537
ஆறுமுகநேரியை சார்ந்த சகோதர, சகோதரியே! அதிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதர, சகோதரியே!
DCW வால் காயல்பட்டனத்திற்க்கு மட்டுமல்ல பாதிப்பு!
நமது சுற்று வட்டாரத்திற்க்கே பாதிப்பு!
நம் எல்லோருக்காக தான் நல் உள்ளங்கள் கொண்ட பலர் போராடுகின்றார்கள்!
சகோதரனே! பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்க உனது உயிரை பணயம் வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?
வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம்! என்று நினைத்துவிட்டீர்கள் போலும்!
கேன்சர் வந்து அதனால் இறக்க கூடியவரின் வேதனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது சரி உங்களுக்கு எப்படி தெரியும்? முள்ளு குத்திய வேதனை, முள்ளு குத்தியவனுக்கு தானே தெரியும்! (கடைசி வரை உங்களுக்கு அந்த வேதனை தெரியாமல் கடவுள் காப்பாற்றட்டும்! )
எங்கேயோ இருந்து வந்து நமது மார்பில் தொழிற்சாலை அமைத்து, அவர்கள் பணம் சம்பாதிக்க, தன் வம்சமே அழிந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் உங்கள் தியாகத்தை என்னவென்று சொல்ல?
கூட்ட தீர்மானத்தில் DCW வால் கிடைக்கும் வரி பணத்தினால் தான் காயல் பட்டணம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சொல்வது சூப்பரோ! சூப்பர் அண்ணா!
இதை எல்லாம் உங்கள் அறியாமை என்பதா? அல்லது உங்களுடைய DCW விசுவாசம் என்பதா?
எது எப்படியோ, நமது மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் கண்ணியமானவர்! அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையினால், நமது சுற்று வட்டாரமே சுகாதார காற்றை சுவாசிக்க கூடிய காலம் மிக விரைவில் வரும் என்று நம்மை படைத்து, பரிபாலிக்கக் கூடியவன் மீது ஆதரவு வைப்போமாக!
2. காலம் கடந்து இவர்கள் எதிப்பார்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[16 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25547
ஆறுமுகநேரி - காயல்பட்டினம் இரு ஊர் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியே இந்த DCW தொழிற்சாலைக்கு ஆதரவான கூட்டம்... அதில் இரு நகர மக்களும் விழிப்புடனே இருக்கிறார்கள்... மிக தெளிவாக உள்ளார்கள்...
இந்த கூட்டத்தை நடத்தவும் அதற்கான செலவுகளையும் அதில் தீவிரமாக செயல் படுவோருக்கு அடிப்படை செலவு தேவைகளையும் யார்.. பூர்த்தி செய்து கொடுத்து இருப்பார்கள் என்று நடுநிலையாளர்கள் அனைவர்களும் விளங்கி இருப்பார்கள்... அதில் சந்தேகமல்ல...! நாளை இவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மன மாற்றம் நியாயத்தின் பக்கம் திரும்பும்...!
நியாயம்.. நீதி.. ஒருபோதும் தோற்றது இல்லை...அநியாயத்திற்க்கும் பொய் சாட்சிக்கும் துணை போவோர்களை (எந்த சமுதயாதவர்களாக இருக்கட்டும்) அவன் வணங்கும் தெய்வமே அவனை மன்னிக்காது...
அதிகம் விவாதிக்க இதில் ஒன்றுமில்லை.. விரைவில் நீதி வெல்லும் எதிர்பார்க்கிறேன்.. இதில் காலதாமதம் ஏற்பட்டால் DCW தொழிற்சாலைக்கு ஆதரவாக இன்று செயல்பட்டவர்கள் நாளை காலம் கடந்து உணர்வார்கள்... இறைவன் இவர்களை உணர்த்துவான்.. மனசாட்சியோடு DCW தொழிற்சாலைக்கு எதிர்த்து போராட முன் வருவார்கள்....
DCW தொழிற்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் அந்த தொழிற்சாலையின் எந்த சுக போக பிரதி பலனையும் எதிர் பார்த்து இயங்கும் கூட்டமல்ல...
3. மனசாட்சியுடன் நீதமுடன் வாழ்வதுடன் சந்ததீகளையும் வள விடுங்கள்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[17 February 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25556
DCW வெளியிடும் கழிவுகளை தங்களின் ஒவ்வொரு வீட்டின் கிணற்றிர்க்கும் குடிநீர்த் தொட்டிகளுக்கும் எடுத்து செல்லுங்கள் பிறகு புரியும் அவர்கள் உங்களை வாழ வைக்க வந்துள்ளார்களா அல்லது கான்சர் என்ற உயிர்கொல்லி நோய் மூலம் கொல்ல வந்துள்ளார்களா என்று. நீதியும் ஒற்றுமையும் ஒரு போதும் தோல்வியுற்றது இல்லை!
மாசுக் கட்டுப்பட்டு வாரியமும் அதிகாரிகளும் சட்டமும் அதன் கடமையை செய்யும். தவறினால் நம்மை எல்லாம் படைத்து ஆளுகின்ற அந்த ஆண்டவன் பிடியில் தப்பிக்க முடியாது. எச்சரிக்கை!!
4. Re:... நல்ல வேடிக்கை தீர்மானம் posted bySeyed Mohamed Sayna (Bangkok)[17 February 2013] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 25565
இப்பொழுது சொல்லுகிறார்கள் கயல்படினத்தை விட்டு விட்டு மட்டற்ற ஊரு கற்களை கேட்டுபார்க்க , நல்ல ஒரு தீர்மானம்
அப்படியாநாள் கயல்பட்டினது கடலில் கலக்கும் நீரை மட்டற்ற ஊருக்கு திருப்பி விடுங்கள் ,
கயல்பட்டினத்து ஊருகரர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்
முயற்சி செய்ந்ங்கள் கடலில் கலக்கும் நீரை உங்கள் ஒருகு பக்கம் திருப்ப ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross