மத்திய அரசின் Swarna Jayanti Shahari Rozgar Yojana (SJSRY) - வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அமல்படுத்தப்பட்டுள்ள திட்டம் ஆகும். இத்திட்டம் மூலம் வேலைதேடும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த திட்டம் 1997 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இதன் விதிமுறைகள் 2009 ஆம் ஆண்டு மறுவடிவமைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான உதவி தொகையை மத்திய அரசு - மாநில அரசு மூலம், உள்ளாட்சி மன்றங்களுக்கு வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்குகிறது.
2004 ஆம் ஆண்டு கணக்குப்படி காயல்பட்டினத்தில் 240 குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக பதிவாகியுள்ளது. இத்திட்டம் மூலம் காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 1,34,558 ஆகும். 2011-12 ஆண்டு வகைக்கு ரூபாய் 7,301 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2012-13 ஆண்டிற்கான இரண்டாம் தவணை தொகை ரூபாய் 28,690 ஆகும் (STEP-UP பகுதி நீங்கலாக). ஆக மொத்தம் ரூபாய் 35,991 தற்போது காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
|