காயல்பட்டினம் நகராட்சியில் நில உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நாளை - சனிக்கிழமை (பிப்ரவரி 16) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுர விபரங்கள் வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சி அறிவிப்பு
பொருள்: காயல்பட்டினம் நகராட்சி - கட்டிட மனை நிலம் அங்கீகாரம் வழங்க உரிய விதிமுறை - பின்பற்ற அறிவுறுத்தல் தொடர்பாக
காயல்பட்டினம் நகர்மன்றம் தீர்மானம் எண் 425 (நாள்: 31.12.2012) ன் படி காயல்பட்டினம் நகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பட்டா நிலங்கள் மூலம் வீடு கட்டும் மனை நிலம் அங்கீகாரம் பெறுவதற்கு (layout) நகரமைப்பு சட்டப்படி பூங்கா, குடிநீர் வசதிகள், தெரு மின் விளக்கு, மின்சார வசதி, பூங்கா அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு, கழிவு நீர் ஓடைகள் அமைப்பதற்கான இடவசதி மற்றும் விதிகளின் படி தெருக்கள் அமைப்பதற்கான வசதிகளை செயல்படுத்துவதற்கு 16.02.2013 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நில உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நகராட்சியில் வைத்து நடைபெற உள்ளது. அதில் அனைத்து நில உரிமைதாரர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
ஆணையர்,
காயல்பட்டினம் நகராட்சி.
இவ்வாறு அத்துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|