காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்து காயல்பட்டின மக்களின் எதிர்ப்பு மத்திய - மாநில அரசு துறைகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார் IAS DCW தொழிற்சாலையை ஒட்டிய மாசு ஏற்பட்டுள்ள பகுதிகளை பிப்ரவரி 7 அன்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது DCW நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஆட்சியர் உத்தரவிட்டார்.
பிப்ரவரி 11 நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தினை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் - 20 நாட்களுக்குள் பதில் வழங்க DCW தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திடம் காயல்பட்டணம்.காம் வினவியது. மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ள நோட்டீஸ் தங்கள் அலுவலகம் மூலம் அனுப்பப்படாது என்றும், திருச்செந்தூர் கோட்டாச்சியர் (RDO) அலுவலகம் மூலம் அனுப்பப்படும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டணம்.காம் - கோட்டாச்சியர் அலுவலகத்தை இது குறித்து தொடர்புகொண்டு வினவியது. இவ்விசயம் குறித்து அரசு வழக்கறிஞர் கருத்து எதிர்ப்பார்க்கப்பட்டிருப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆவணங்களும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருவதாகவும், அதனால் இது வரை நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என திருச்செந்தூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
DCW தொழிற்சாலைக்கு எதிராக Criminal Procedure Code சட்டத்தின் பிரிவு 133 படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளதாக காயல்பட்டணம்.காம் அறிகிறது.
1. நீதிக்கு ஆதரவாக போராடும் மக்களின் உணர்வு கண்டிப்பாக வெற்றியே தரும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[16 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25548
மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு.. DCW ஆலையை எதிர்க்கும் மக்களை நம்பிக்கை செய்ய வைத்துள்ளது...
நீதிக்கு ஆதரவாக போராடும் மக்களின் உணர்வு கண்டிப்பாக வெற்றியே தரும்... அநீதிக்கு ஆதரவாக செயல் படுவோருக்கு தோல்வியே தரும்..! அநியாயகாரர்களுக்கு இறைவனின் தண்டனை உறுதி... விரைவில்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross