அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
காயல்பட்டினத்தில், நேற்று (பிப்.13) இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றிரவு 11.00 மணிக்கு சாரலாகத் துவங்கிய மழை, இன்று அதிகாலை 05.30 மணி முதல் 06.00 மணி வரை மிதமழையாக வலுப்பெற்றது. மீண்டும் நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரையில் சாரல் மழை பெய்தது.
இம்மழை காரணமாக, நகரில் வெப்ப வானிலை தனிந்து, இதமான காற்றுடன் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இன்று முழுக்க சூரிய ஒளி நகரில் தென்படவில்லை.
மழைக்குப் பின்பான நகரின் பல்வேறு பகுதிகளது காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
நகர வானிலை குறித்த செய்திகளை, www.kayalsky.com இணையதளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். |