காயல்பட்டினத்தில் பல தெருக்களில் புதிய சாலை அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய சாலை அமைப்புப் பணிகளுக்காக பழைய சாலைகள் பல நாட்களாக தோண்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.
இது ஒருபுறமிருக்க, இச்சாலைப் பணிகளுக்காக பழைய சாலைகள் சரியான அளவில் தோண்டப்படவில்லை என்றும், தோண்டப்பட்ட மணல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், இன்னும் பல குறைகளை முன்வைத்தும் - சாலைப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லையென, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யப்பட்டது.
அண்மையில் நகரில் பெய்த மழை காரணமாக, தோண்டப்பட்ட இச்சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு மேலும் அவதியை அளித்தது. இந்நிலையில், 18.02.2013 திங்கட்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் சாலைகள் மீண்டும் தோண்பட்டு வருகிறது.
அத்தெருவை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகராட்சியின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் மேற்பார்வையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |