காயல்பட்டினம் கடற்கரையோடு ஒட்டியுள்ள - குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான பட்டா நிலத்தில், மாலை நேரத்தில் கடற்கரைக்கு வந்து செல்வோரின் வசதிக்காக, தொழுமிடம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் மஃரிப் மற்றும் இஷா ஆகிய இரவு நேரத் தொழுகைகள் பல்லாண்டு காலமாக ஜமாஅத்துடன் (கூட்டாக) நடத்தப்பட்டு வருகிறது.
19.02.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) மாலை 18.40 மணியளவில் மஃரிப் கூட்டுத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதை மாறி வந்த ஆட்டுக்குட்டி ஒன்று தொழுமிடத்தில் ஏறி, சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தது. பின்னர், தொழுகையை வழிநடத்தும் இமாமை சிறிது நேரம் மோப்பமிட்டு விட்டு, ஓய்வெடுக்கும் முகமாக முதல் வரிசைக்கு முன் அமர்ந்துகொண்டது.
தொழுகை நிறைவுற்றதும், அதில் கலந்துகொண்டோர் அனைவரும் இரக்கத்துடன் அதனைப் பார்த்து ரசித்தனர். |