காயல்பட்டினத்தில் பல தெருக்களில் புதிய சாலை அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய சாலை அமைப்புப் பணிகளுக்காக பழைய சாலைகள் பல நாட்களாக தோண்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.
இது ஒருபுறமிருக்க, இச்சாலைப் பணிகளுக்காக பழைய சாலைகள் சரியான அளவில் தோண்டப்படவில்லை என்றும், தோண்டப்பட்ட மணல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், இன்னும் பல குறைகளை முன்வைத்தும் - சாலைப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லையென, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யப்பட்டது.
அண்மையில் நகரில் பெய்த மழை காரணமாக, தோண்டப்பட்ட இச்சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு மேலும் அவதியை அளித்தது. இந்நிலையில், 18.02.2013 திங்கட்கிழமையன்று, காயல்பட்டினம் ஆஸாத் தெருவில் சாலைகள், அத்தெருவை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகராட்சியின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் மேற்பார்வையில், 40 முதல் 45 செ.மீ. ஆழத்தில் மீண்டும் தோண்டப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவு (45 செ.மீ. - அதாவது 1½ அடி.)
அதன் இணைப்புச் சாலையான சித்தன் தெரு - ஆஸாத் தெரு குறுக்குச் சாலையில், 30 செ.மீ. (1 அடி) ஆழத்திலும், சுமார் 380 செ.மீ. அகலத்திலும் தோண்டப்பட்டிருந்தது.
ஆழம்...
அகலம்...
ஆஸாத் தெரு - கி.மு.கச்சேரி தெரு குறுக்குச் சாலையில், ஆஸாத் தெருவில் தோண்டப்பட்டது போல ஓரளவுக்கு சரியான அளவில் தோண்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
இவ்விரு பகுதிகளிலும் மீண்டும் ஆழமாக தோண்டப்பட்டது போல, சித்தன் தெரு - ஆஸாத் தெரு குறுக்குச் சாலையும் தோண்டப்படும் என்று கருதப்பட்ட வேளையில், புதிய சாலை அமைப்பதற்கான முதல் படிவத்திற்குத் (1st layer) தேவையான கல் மணல், 20.02.2013 புதன்கிழமையன்று (நேற்று) கொட்டப்பட்டுள்ளது.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 12:24 / 21.02.2013] |