வரும் கல்வியாண்டில் புதிதாகத் துவக்கப்படவுள்ள WISDOM PUBLIC SCHOOL பள்ளிக்கு, இலச்சினை (Logo) மற்றும் முழுக்கம் (Slogan) உருவாக்கப்படவுள்ளதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும், பள்ளியை நிர்வகிக்கும் VISION EDUCATIONAL TRUST சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், காயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில், எமது VISION EDUCATIONAL TRUST சார்பில், Wisdom Public School பள்ளி, உங்கள் யாவரின் மேலான பேராதரவோடு வரும் கல்வியாண்டில் துவக்கப்படவுள்ளது.
இப்பள்ளிக்கு இலச்சினை (Logo) மற்றும் முழக்கம் (Slogan) திறமையாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. சிறந்த இலச்சினை மற்றும் முழக்கத்தை வரவழைப்பதற்காக, அறக்கட்டளையின் சார்பில் பரிசுப் போட்டியை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்…
எதிர்பார்க்கப்படும் பொருள்:
இலச்சினை (Logo) மற்றும் முழக்கம் (Slogan)
உள்ளடக்கம்:
Wisdom Public School பள்ளியின் Vision & Mission உணர்த்தப்படும் வகையில் அமைந்திருத்தல் வேண்டும். Vision & Mission குறித்து அறிந்துகொள்ள, பள்ளியின் Wisdom Public School என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், www.wisdompublicschool.org/mission.aspx பார்த்தறிந்துகொள்ளலாம்.
போட்டியாளர்களுக்கான தகுதி:
>> ஆண் - பெண் பாகுபாடின்றி (Professional Designers உட்பட) அனைவரும் பங்கேற்கலாம்...
>> வயது வரம்பு இல்லை...
>> அறக்கட்டளை அறங்காவலர்கள் பங்கேற்க இயலாது...
பரிசுத்தொகை:
>> சிறந்த உருவாக்கத்திற்கு பரிசு ரூபாய் 5000/- (ரூபாய் ஐந்தாயிரம்)
>> இலச்சினை, முழக்கம் இரண்டையும் வெவ்வேறு போட்டியாளர்கள் சிறப்பாக செய்திருப்பின், பரிசுத் தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:
28.02.2013
உருவாக்கப்பட்ட இலச்சினை, முழக்கத்தை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
admin@wisdompublicschool.org
>> இலச்சினை மற்றும் முழக்கம் High Resolutionஇல் இருத்தல் அவசியம்.
>> நடுவர்களின் தேர்வே இறுதியானது.
இவ்வாறு, Vision Educational Trust சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|