காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் வரும் மார்ச் மாதம் 03ஆம் தேதி நடைபெறுகிறது.
ரபீஉல் ஆகிர் மாத முதல் தேதியில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. 28.02.2013 முதல் 03.03.2013 வரை தினமும் அதிகாலை கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுகிறது. அந்நாட்களில் இரவு 08.30 மணிக்கு மார்க்க அறிஞர்களால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது.
03.03.2013 ஞாயிற்றுக்கிழமை மாலையில் மவ்லித் மஜ்லிஸும், இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸும் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, இரவு 08.30 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சன்மார்க்க சொற்பொழிவாற்றுகிறார்.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஃப்.ரஹ்மத்துல்லாஹ் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறுகின்றன.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் - 04.03.2013 அதிகாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை, பொதுமக்களுக்கு நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் தலைமையில், செயலாளர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். |