அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் இன்று தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதிமுக காயல்பட்டினம் நகர கிளை, நகர ஜெயலலிதா பேரவை, அதிமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு ஆகியவற்றின் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
கட்சிக் கொடியேற்ற நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்து 500 பேருக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெறவுள்ளன.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கவுள்ளார். அவருடன், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, நகர அதிமுகவினர் செய்து வருகின்றனர். |