காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, வெள்ளி விழா மலர் வெளியிடப்படவுள்ளதாகவும், ஆக்கங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வெள்ளி விழா:
நமதூர் காயல்பட்டினம் - சதுக்கைத் தெருவில் அமைந்து, சமுதாயப் பணிகளாற்றி வரும் நமது அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை, இன்ஷாஅல்லாஹ் வரும் மே மாதம் கொண்டாடுவதென, அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலர் வெளியீடு:
வெள்ளி விழா ஆண்டு என்பதால், வெள்ளி விழா மலர் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மலரை, நம் நகரின் சரித்திரப் பதிவுப் புத்தகமாகத் திகழச் செய்யும் நோக்குடன் சிறந்த முறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால், நம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து, பயனுள்ள கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், அறிவுப்பூர்வமான தகவல்கள் உள்ளிட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மலரில் இடம்பெறச் செய்வதற்கான ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
176/220, சதுக்கைத் தெரு
காயல்பட்டினம்
என்ற எமது முகவரிக்கோ அல்லது aywakayal@gmail.com என்ற எமதமைப்பின் மின்னஞ்சல் முகவரிக்கோ தமது ஆக்கங்களை - 01.04.2013 தேதிக்குள் அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தணிக்கைக்குப் பின் - வெள்ளி விழா மலரில் இடம்பெறும் சிறந்த ஆக்கங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
AYWA QUIZ - 2013:
அதுபோல, வெள்ளி விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் நகரின் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) பங்கேற்கும் மார்க்க மற்றும் பொது அறிவு வினாடி-வினா போட்டி AYWA QUIZ - 2013 என்ற தலைப்பில், வரும் மே மாத முதுல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள அல்அமீன் மினி மார்க்கெட்டில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, 15.03.2013 தேதிக்குள் ஒப்படைத்து, தகுதிச் சுற்றில் கலந்துகொள்ளலாம். இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் அனைவருக்கும் பரிசு உண்டு.
பள்ளிக்கூடங்களில் 08ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் (ஓர் அணிக்கு இருவர் வீதம்), இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவர்களாவர்.
அல்அமீன் மினி மார்க்கெட்டில் அணுகி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
வாவு K.A.ஷாஹுல் ஹமீத்
செய்தித் தொடர்பாளர்
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
காயல்பட்டினம் |