ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 29-ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 08-02-2013 வெள்ளியன்று
"காயலர் குடும்ப சங்கமம்" விழாவாக நடந்தேறியது. இதில் 6-ஆவது அமர்வின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்த விபரங்கள் பற்றி, அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 29-ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 08-02-2013 வெள்ளியன்று "காயலர் குடும்ப சங்கமம்" விழாவாக நடந்தேறியது. இதில் 6-ஆவது அமர்வு 2013-2014 இரு ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யும் நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களின் நல்லாதரவுடன் கீழ்காணும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதின் விபரம்தனை அறிய தருவதில் பெருமிதம் கொள்கின்றோம்.
மன்றத்தின் 29 வதுபொதுக்குழு,6 ஆவது அமர்விற்கான நிர்வாக தெரிவு மற்றும் 11 ஆம் ஆண்டு துவக்கவிழா புகைப்பட ஆல்பத்தை காண இங்கு அழுத்தவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகளின் மூலமாக எம்மன்றம் மென்மேலும் உத்வேகத்துடன் செயல்பட்டு, நல்லதோர் சமூக நலப்பணிகளாற்றி நற்சேவைகள் பல நமதூருக்காக செய்திட பிரார்த்திக்குமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
படத்தின் மேல் அழுத்தினால் புது பக்கத்தில் பெரிய அளவில் படத்தினை காணலாம்...
மன்றத்தின் 70-ஆவது செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும்15-03-2013
வெள்ளி மாலை 5.30 மணிக்கு சகோ,நஹ்வி, ஏ.எம்.ஈஸா ஜக்கரியா அவர்களின் அனுசரணையில் ஜித்தா பலதில் உள்ள அல் கய்யாம் தங்கும் விடுதியின் கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறியத்தருகிறோம். தேர்ந்தெடுக்கபட்ட புதிய உறுப்பினர்கள் யாவரும் தவறாது வருகை தந்து உயரிய நல் ஆலோசனைகளை வழங்கி சிறப்பிக்குமாறும் மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
தகவல்:
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,
செயலாளர், ஜித்தா காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
|