காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 17ஆவது ஆண்டு விழா, 23.02.2013 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் 09ஆம் வகுப்பு மாணவி கதீஜா ஷீரீன் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, 11ஆம் வகுப்பு மாணவி ஆர்.ஜுல்ஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் ஜி.வைஸ்லின் ஜிஜி மற்றும் மேடையில் முன்னிலை வகித்த - ஹாஜி கே.செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.எம்.செய்யித் அஹ்மத், அப்துல் ராஸிக், வி.எம்.எஸ்.அமீன் ஆகியோரும், பள்ளி முதல்வரும் பரிசுகளை வழங்கினர். பின்னர், சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளியின் 09ஆம் வகுப்பு மாணவி ஃபாத்திமா முனவ்வரா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். |