இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் - தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போதே தங்கள் பாஸ்போர்ட்டினை
சமர்ப்பிக்க வேண்டும் என இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. ஹஜ் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வரும் நிலையில் - இறுதி நாளான மார்ச் 20 க்கு முன்னர் ஹஜ் பயணியர் புதிதாக தங்கள் பாஸ்போர்டினை பெற்றிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி - பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகிகள், ஹஜ் பயணியருக்கு என பாஸ்போர்ட்கள் வழங்க - சிறப்பு தொடர்பு அதிகாரிகளை நியமிக்கவும்,
பிரத்தியேக கவுன்டர்கள் திறக்கவும், புகார்களை துரிதமாக நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் ஹஜ் பயணம் செய்வோர் (கவரில் தலைவராக அடையாளம் காணப்பட்டுள்ளவர்) - தங்கள் ரத்து செய்யப்பட்ட காசோலை ஒன்றினையும் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் - பயணியருக்கு திரும்ப கொடுக்கப்படும் பணம் துரிதமாக EFT முறையில் சென்றடைய வசதியாக இருக்கும்.
ரத்து செய்யப்பட்ட காசோலையை சமர்ப்பிக்க முடியவில்லை என பல விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளதால், அதற்கு மாற்றாக விண்ணப்பதாரரின் வங்கியிடம் இருந்து கீழ்க்காணும் விபரங்கள் அடங்கிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
i) Bank’s Name
i) Bank’s Branch
ii) IFS Code Number
iii) Name of the Accounts Holder
iv) Account Number
v) Type of Account
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross