Re:...தூய பார்வை தூரத்து பார்வை posted bymackie noohuthambi (kayalpatnam)[15 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25521
ஆசிரியர் அவர்களின் கட்டுரை, படித்து முடித்து, "முகவரிகள் தொலைந்ததனால் முகிலினங்கள் அலைகின்றனவே" என்பது போல் திக்கு தெரியாமல் அலைபவர்களை கைதூக்கி விடவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்கிறது.
KCGC இந்த வகையில் களம் இறங்கி செயல்படுவதை பார்க்கிறோம். இப்போது நம்மவர் நிறைந்த மண்ணடியில் அலுவலகம் அமைக்கும் செய்தியும் வந்திருக்கிறது
என்னதான் இருந்தாலும் படித்து முடித்த மாணவர்கள் மனதிலே தன்னம்பிக்கையும் நம்மால் முடியும் என்ற உணர்வும் சுயதைரியமும் வராமல் ஒன்றும் செய்ய முடியாது
இரண்டு நண்பர்கள் நேர்காணலுக்கு சென்றார்கள். ஒருவர் அழைக்கப்பட்டார், கேள்விகள் கேட்கப்பட்டன,கடைசி கேள்வி,"இந்த வேலை உங்களுக்கு கிடைக்கா விட்டால் என்ன செய்வீர்கள்?" பட்டதாரியின் பதில்,"எனக்கு கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்துக்கொள்வேன் வேறு இடத்தில முயற்சி செய்வேன்". சரி , ஒரு வாரத்தில் தகவல் சொல்கிறோம், சென்று வாருங்கள்...இப்போது மணி அடிக்கிறது.
அடுத்த நபர் உள்ளே வருகிறார். கேள்விகள் கேட்கப்படுகின்றன, பதில்கள் பரிமாறப்படுகின்றன, இறுதிக் கேள்வி, "இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் என்ன செய்வீர்கள். பட்டென்று பதில் வருகிறது, " உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று நினைப்பேன்" சொல்லிவிட்டு வெளியேற முயன்றவரை தடுத்து நிறுத்துகிறது நிர்வாகம். "ஏன் அப்படி சொன்னீர்கள்?" "வேறென்ன சார், நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆணித்தரமாகவும் தெளிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பதில் சொன்ன என்னை நீங்கள் தேர்ந்தெடுக்க தவறினால், அது உங்கள் தலை எழுத்து. உங்களுக்கு தெரியுமா கம்பர் என்ற புலவர் சோழமன்னனின் ஆஸ்தான கவிஞாக இருந்தார். ஒரு முறை மன்னனுக்கும் புலவருக்கும் இடையே கருத்து வேற்றுமை.மன்னர் கம்பரை வெளியே போக சொன்னார். வெளியேறும்போது கம்பர் பாடினார்."வல்லவனும் நீயோ வள நாடும் உன்னதோ, உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன், என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தன் உண்டோ, உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?" அடுத்த நிமிடம் மன்னர் கம்பரை மீண்டும் ஏற்றுக்கொண்டார்.
சொல்லி முடித்த வேட்பாளரை தட்டிக் கொடுத்து,அட, ராமாயணம் வேறு தெரியுமா, சபாஷ் " You are appointed "என்று கூறி வழி அனுப்பியது அந்த நிர்வாகம். இது கதை அல்ல நிஜம். இப்படி நம்மில் எத்தனை பேருக்கு தைரியமாக நேர்காணலை அணுக முடிகிறது. எண்ணிப் பார்க்கிறேன்
"WE CANNOT COMMAND SUCCESS, SUCCESS COMES TO THOSE WHO DARE AND ACT. IT SELDOM GOES TO THE TIMID AND COWARD" சொன்னவர் ஜவஹர்லால் நேரு. இந்த கட்டுரையை படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கும் உதவும் புரவலர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள். +2 தேர்வு நெருங்குகிறது, தெளிவான திட்டம். விடா முயற்சி, கடும் உழைப்பு, இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கும் வெற்றிக்கும் வானமே எல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross