நவீன கொள்ளைக்கார கும்பல் !! posted bySalai. Mohamed Mohideen (Dallas)[16 February 2013] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25539
பொதுவாக மற்றவர்களுக்கு நடந்த / ஏற்பட்ட வலியை கட்டுரையாக வடிக்கும் போதே அதன் தாக்கம் எழுதுபவரிடத்தில் இருக்கும். ஆனால் தன் சொந்த அனுபவத்தை வலியை இக்கட்டுரையில் வடித்து முடிக்கும் வரை, ஆசிரியர் எந்தளவுக்கு மன வேதனை அடைந்திருப்பார் என்பதனை உணர முடிகின்றது.
வாழ்நாள் முழுதும் ஒருவன் சம்பாதித்த சொத்தை ஒரே நிமிடத்தில் ஆட்டையை போட்டு அவனை அட்ரஸ் இல்லாவதானாக பிச்சைக்காரனாய் நடுத்தெருவுக்கு இட்டு செல்லும் மகிமையை தான் இன்றைய பல மருத்துவர்கள்... மருத்துவ மனைகள் (நோயாளிகளின் வீட்டு மனையை வித்த காசு இவர்களின் மருத்துவ மனையாகி விட்டது?) செய்து கொண்டிருக்கிறார்கள். சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி பல லட்சங்களை கொட்டி கொடுத்தும், இவர்கள் தரும் மருத்துவத்தில், நோயாளிகளை நடத்தும் விதத்தில் ஒரு ஆத்மார்த்த திருப்தி இல்லையென்றால் அதை விட மிகப்பெரிய கொடுமை எதுவுமே இல்லை. இவர்கள் மீது "நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில்" வழக்குத் தொடுத்து, உண்மையான மருத்துவ பரிசோதனை & செலவு பற்றி நிரூபிக்க உத்தரவிட படவேண்டும்.
" நோயாளிகள் (அவர்களின் உறவினர்கள்) தங்களின் உரிமைகளை பற்றிய & மருத்துவம் சம்பந்தமான போதிய அறிவும் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியம். அதற்காக முயற்சிகள் விழிப்புணர்வுகள் நமதூரில் நடத்த பட வேண்டும்" இல்லையென்றால் இந்த நவீன கொள்ளைக்கார கும்பலிடமிருந்து எவரும் தப்ப முடியாது. இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்... " என்னால் முடிஞ்சதை மருத்துவம்ங்க பெயரில் கொள்ளையடித்து விட்டேன் இதுக்கு மேல அந்த கடவுள் தான் நோயாளியையும் அவங்க குடும்பத்தையும் காப்பத்தனும் !"
கன்சல்டிங் பீஸ், மாத்திரையில் கமிஷன், லேப், ஸ்கேன்சென்டரில் கமிஷன் என ஒவ்வொரு இடத்திலும் நாம் ஏமாற்றப்படுகிறோம். மருந்து கம்பெனிகள் ('மெடிக்கல் ரெப்' மூலம்) தரும் அன்பளிப்பு / கமிசனுக்கு ஆசைப்பட்டு விலை உயர்ந்த மருந்துகளை எழுதுகின்றனர். எவனுக்குமே புரியாததொரு கிறுக்கல் எழுத்து (மருந்து சீட்டு). நோயாளிக்கு புரியும் வகையில் நோயை தெரிவி / விவரிப்பதுமில்லை.
அரசு மருத்துவமனைகள் சுத்தமில்லாமல் இருப்பதும், ஒருவித அறுவெருக்கத்தக்க வாசனையோடும் இருப்பதும் தனியார் மருத்துவமனைகளுக்கு வசதியாகி போய்விட்டது. போதாக்குறைக்கு கலைஞர் காப்பிட்டு திட்டம்.... அரசாங்க மருத்துவமனைகளை ஒரேயடியாக தண்ணி ஊத்தி தனியார் மருத்துவமனைகளை ஊட்டி வளர்ப்பதற்காக அறிமுகபடுத்த பட்ட திட்டம்.
நடுத்தரபட்ட ஏதோ விபரமரிந்த மக்களுக்கே இந்த கொடுமையான மன வருத்தம், அவலம் என்றால்... கண்ணை காட்டி காட்டில் விட்டது போல இருக்கும் ஏழை எளியவர்களின் நிலை அந்தோ பரிதாபம் ! வாழ்நாள் முழுவதும் பிணியுடன் குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ள பட்டிருகின்றார்கள். இவர்கள் படும் கஷ்டத்தை... சந்திக்கும் அவலங்களை ஓரிரு வரிக்குள் எழுதி முடித்து விடமுடியாது !
மைக்ரோ காயல் அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு, மருத்துவ (பொருளாதார) உதவியோடு மருத்துவ செலவை குறைப்பதற்காக, விலைக்குறைந்த தரமான மருத்துவத்தை பெறுவதற்கான ஆலோசனைகள் இயன்றளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
பஷீர் காக்கா போன்ற நம் சகோதரர்களின் முழுமையான ஒத்துழைப்பு /கருத்து /அனுப / தகவல்கள் பரிமாற்றங்கள் கிடைத்தால், எங்கள் சேவைகளை இன்னும் அதிகமாக்கி அத்துடன் (மாற்று) மருத்துவ முறைகளை பற்றிய தகவல்கள் சேகரிப்பு (Database), விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு www.microkayal.com / info@microkayal.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross