காலம் கடந்து இவர்கள் எதிப்பார்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[16 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25547
ஆறுமுகநேரி - காயல்பட்டினம் இரு ஊர் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியே இந்த DCW தொழிற்சாலைக்கு ஆதரவான கூட்டம்... அதில் இரு நகர மக்களும் விழிப்புடனே இருக்கிறார்கள்... மிக தெளிவாக உள்ளார்கள்...
இந்த கூட்டத்தை நடத்தவும் அதற்கான செலவுகளையும் அதில் தீவிரமாக செயல் படுவோருக்கு அடிப்படை செலவு தேவைகளையும் யார்.. பூர்த்தி செய்து கொடுத்து இருப்பார்கள் என்று நடுநிலையாளர்கள் அனைவர்களும் விளங்கி இருப்பார்கள்... அதில் சந்தேகமல்ல...! நாளை இவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மன மாற்றம் நியாயத்தின் பக்கம் திரும்பும்...!
நியாயம்.. நீதி.. ஒருபோதும் தோற்றது இல்லை...அநியாயத்திற்க்கும் பொய் சாட்சிக்கும் துணை போவோர்களை (எந்த சமுதயாதவர்களாக இருக்கட்டும்) அவன் வணங்கும் தெய்வமே அவனை மன்னிக்காது...
அதிகம் விவாதிக்க இதில் ஒன்றுமில்லை.. விரைவில் நீதி வெல்லும் எதிர்பார்க்கிறேன்.. இதில் காலதாமதம் ஏற்பட்டால் DCW தொழிற்சாலைக்கு ஆதரவாக இன்று செயல்பட்டவர்கள் நாளை காலம் கடந்து உணர்வார்கள்... இறைவன் இவர்களை உணர்த்துவான்.. மனசாட்சியோடு DCW தொழிற்சாலைக்கு எதிர்த்து போராட முன் வருவார்கள்....
DCW தொழிற்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் அந்த தொழிற்சாலையின் எந்த சுக போக பிரதி பலனையும் எதிர் பார்த்து இயங்கும் கூட்டமல்ல...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross