எனக்கு தாயைப் போன்றவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[18 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25602
நான் 1989 - 90இல் திருச்சி - ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் செய்து வந்த காலத்தில், வியாழக்கிழமை பின்னேரம் வார விடுமுறையின்போது, மர்ஹூமா அவர்களின் கணவர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் மாமா அவர்கள் நிர்வகித்து வந்த அரிஸ்டோ ஜுவல்லர்ஸ் நகைக் கடைக்கு வந்து தங்கி, இரவு உணவு உண்டு செல்வது வழமையாய் இருந்தது.
அக்காலகட்டத்தில், அவர்களது மகன் - எனதன்பு நண்பன் எம்.ஐ.ஸதக்கத்துல்லாஹ், உவைஸ் ஹாஜியார் பேரன் - எனதன்பு நண்பன் உவைஸ், அமீன் ஹாஜியார் மகன் - எனதன்பு நண்பன் எம்.ஏ.முஹம்மத் நூஹ், அன்பு நண்பன் மொகுதூம் அலீ ஸாஹிப் ஆகியோருடன் இணைந்து பல விளையாட்டுகளை அவர்களின் இல்லத்தில் விளையாடி மகிழ்வோம். (தம்பி எம்.ஐ.முஹம்மத் நூஹ் சிறுவனாக இருந்தார்.)
அந்நேரங்களில், மர்ஹூமா அவர்கள் எங்கள் அனைவரையும் ஒரு தாயைப் போலவே அணுகுவார்கள்... சிறு வயதிலிருந்த எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் வந்தபோதிலும், யாருக்காகவும் - யாரையும் விட்டுக்கொடுக்காமல் அனைவரிடமும் நளினமாகப் பேசி, எங்கள் சண்டையை மறக்கடிப்பார்கள்.
மத்ரஸாவிற்கு நான் விடைபெற்றுச் செல்கையில், ஒரு வாரத்திற்குத் தேவையான தின்பண்டங்களையெல்லாம் தந்து வழியனுப்புவார்கள்.
அந்த பாச உணர்வு - 23 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இன்றளவும் என் மனதில் நிலைத்து நிற்கிறது. அவர்களைக் கண்டபோதெல்லாம் இதனை நினைவுகூர்ந்து பேசுவதுண்டு.
வல்ல அல்லாஹ், கருணையே உருவான - என் தாய்க்கு இணையான மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மர்ஹூமா அவர்களின் அன்பிற்குரிய குடும்பத்தார் (அனைவரையுமே குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எனக்கு அனைவரோடும் நெருக்கமுண்டு!) அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross