Re:...மனைவி அமைவதெல்லாம்.... posted bymackie noohuthambi (kayalpatnam)[18 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25604
எனது அருமை மச்சான் இக்பால் அவர்களுக்கு அமைந்த மனைவி போல் எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கணவனை, தன்னை ஒரு நோய் மாற்றி இன்னொரு நோய் ஆட்கொள்ளும் சந்தர்ப்பத்திலும் தன கணவனுக்கும் ஊழியம் செய்து அவர்கள் வீட்டுக்கு அழைத்து வரும் விருந்தாளிகளையும் உபசரித்து எல்லோரது மனதிலும் இடம்பிடித்து அதில் கிடைக்கும் இன்பத்தை திருப்தியை தன் வாழ்வின் லட்சியமாக கொண்டு வாழ்ந்த ஒரு சிறப்பான மனைவியாக, ஒரு பாசம் மிக்க தாயாக, கருணை மிக்க மாமியாக, மழலைகளின் உம்மம்மாவாக, வாப்பிசாவாக, ஒரு நேசம் மிக்க உடன் பிறப்பாக, உற்றோருக்கும் மற்றோருக்கும் உதவும் கரமாக வாழ்ந்து தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சேர்த்து, நம்மிடையே இருந்து பிரிந்து சென்று விட்ட, பெயருக்கு பொருத்தமான எனது அருமை மச்சி ஜமீலா அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க பதியை அவள் தங்கும் இடமாக ஆக்கி வைப்பானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமானதாகவும் விசாலமானதாகவும் ஆக்கிவைப்பானாக.
அந்த சிறப்பான குடும்பத்தின் நற்குணங்கள் நிறைந்த தாயை மனைவியை சகோதரியை இழந்து நிற்கும் எல்லோருக்கும் அல்லாஹ் SABRAN JAMEELAA என்ற நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross