செய்தி: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஏப்.02 அன்று கவன ஈர்ப்புப் பேரணி! இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சிறப்பான தீர்மானங்கள்..ஆனால் posted bymackie noohuthambi (kayalpatnam)[19 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25620
தீர்மானங்கள் என்னவோ சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அவற்றை அமுல் படுத்த ஆட்சியாளர்களை அணுகுவதிலும் அழுத்தம் கொடுப்பதிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் அரசியல் கட்சிகள் இப்போது இருக்கின்றன. இதற்கு முஸ்லிம் லீக் விதி விலக்கு என்று என்னால் நினைக்க முடியவில்லை.
ஏனெனில் கலைஞர் 1971 இல் அரியணை ஏறியபோது அவர் அமர்க்களமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுதான் இந்த மது கடைகள். தொடர்ந்து வந்த ஆட்சிகளும் கலைஞருடைய திட்டங்களை முடக்கினாலும் அவர் ஆரம்பித்து வைத்த, ஏழைக் குடும்பங்களின் கண்ணீரை ஆறாக ஓட செய்கின்ற, இன்னும் ஓரடி மேலே சென்று சொல்வதானால் இன்று நாட்டில் நடக்கின்ற கொலை கொள்ளை வழிப்பறி பாலியல் பலாத்காரம் அதனால் ஏற்படும் உயிர் இழப்புக்கள் தற்கொலைகள் எல்லாவற்றுக்கும் ஆணி வேறாக ஊற்றுக்கண்ணாக திகழும் இந்த மதுவை ஒழிக்க முன்வரவில்லை. அரசுக்கு அதிக வருவாயை அள்ளித்தரும் இந்த டாஸ்மாக் கடைகள் ஒரு அட்சய பாத்திரமாகவே போற்றி வளர்க்கப்படுகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது.
இப்போது மதுவிலக்கு என்று நாம் உரத்து பேசினாலும் நாம் கூட்டணி அமைத்துள்ள தலைமை அது திமுகவானாலும் அதிமுக வானாலும் இந்த கோரிக்கையை அமுல்படுத்துவதாக தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொன்னால்தான் அவர்களுடன் கூட்டு என்று யாருமே துணிந்து சொல்வதில்லை சட்டமன்றத்தில் எத்தனை ஆசனங்கள் நமக்குக் கிடைக்கும் வெற்றி வாய்ப்புகள் உள்ள இடங்கள் எவை என்ற கணக்கு போட்டுதான் தங்கள் கூட்டணி வியூகங்களை வகுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு பாரம்பரியம் மிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகே தள்ளப் பட்டுள்ளது என்ற வேதனையான் நிதர்சன உண்மையை நான் இங்கு வெளிப் படுத்த விரும்புகிறேன்.
நாகரிகமான விமர்சனங்களை மிக உன்னிப்புடனும் பொறுப்புடனும் கவனித்து ஆவன செய்யும் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக சகோதரர் அபூபக்கர் அவர்களும் புதிய பொறுப்பேற்றிருக்கும் இப்ராஹிம் மக்கி அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதும் எனக்கு மன திருப்தியை தருவதால் இன்ஷா அல்லா நீங்கள் வடித்து எடுக்கும் தீர்மானங்கள் உள்ளபடியே செயல் வடிவம் பெற வேண்டும் என்றால் சற்று கடுமையாக உங்கள் கூட்டணி வியூகங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கலைஞரா, புரட்சி தலைவியா என்பதல்ல கேள்வி பூரண மதுவிலக்கு, சிறையில் வாடுபவர்களை உடனடியாக விடுதலை செய்வது இந்த இரண்டு அம்சங்களில் சமரசம் செய்யாமல் உங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் அவர்கள் உங்கள் காலடியில் வந்து விழுவார்கள். ஏனெனில் ஆட்சி அதிகாரங்களை தருவதும் அவற்றிலிருந்து ஒரு நொடியில் அவர்களை அகற்றுவதும் அல்லாஹ் தான் என்ற உறுதியான ஈமானில் நிலைத்து நிற்பவர்கள் நாம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக உங்கள் சிறப்பான தீர்மானங்கள் செயல்வடிவம் பெற அல்லாஹ் உதவி செய்வானாக. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross