வருந்துகிறோம் posted bySalai Sheikh Saleem (Dubai)[19 February 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25623
மர்ஹூமா அவர்கள் எனக்கு அடுத்த வீடு, என் நெருங்கிய பால்ய நண்பன் மக்கி அவர்களின் ராத்தா. இதை விட வேறு என்ன வேண்டும் மர்ஹூமா அவர்களோடு எனக்குள்ள உறவின் நெருக்கத்தை சொல்வதற்கு? என்னை கண்டித்து, ஊட்டி ஆளாக்கியவர்கள். அவ்வப்போது அவர்கள் முகத்தில் இழைந்தோடும் புன்னகையோடு அவர்கள் உதிர்க்கும் நகைச்சுவை இன்னும் என்னுள் நிழலாடுகிறது. மிகவும் நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் மர்ஹூமா ஜமீலா ராத்தா அவர்கள். திடீர் என்று அவர்கள் வாபாத்து செய்தி அறிந்து அதிர்ச்சிதான்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களின் மண்ணறையை மலர்ப்படுக்கைகளால் மணக்கும் இடமாக ஒளிவாக்கித்தந்து, மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் சொர்க்கத்தில் தரித்திருக்க பேரருள் புரிவானாகவும் ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது மரியாதைக்குரிய இக்பால் ஹாஜியார் அவர்களுக்கும், எனது அன்பு நண்பன் மக்கி மற்றும் குடும்பத்தார்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அந்த வல்ல ரஹ்மான் பொருமையைக்கொடுப்பானாகவும் ஆமீன்.
உங்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
அன்புடன்
சாளை ஷேக் ஸலீம்
மறலியா ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross