Re:...Thai Land...தாய் மண் posted bymackie noohuthambi (kayalpatnam)[19 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25629
தாங்கள் தொழில் செய்யும் இடம் "தாய் மண்"(Thailand ) ணில் இருந்து தாங்கள் பிறந்த "தாய் மண்"ணுக்கு உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சம்சுதீன் மாமா அவர்களின் சீரிய தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்தில் அவர்கள் தொழில் அதிபர்களை அங்கு முதலீடு செய்ய அழைத்திருப்பது நமதூர் மக்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுக்கும் நல்ல உயரிய நோக்கத்தில் என்றாலும் இன்னொரு வகையில் அந்த நாட்டின் வெளி உறவு துறை அமைச்சர், எங்கள் நாட்டில் தொழில் வாய்ப்பு அதிகம் உள்ளது, உங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறோம், எங்கள் நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்கி எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதுடன் நீங்களும் பயன்பெறுங்கள் என்று அழைப்பது போல் இருக்கிறது. மாஷா அல்லாஹ் . உங்கள் முயற்சிகள் வீண் போகாது.
ஆனால் அத்தகைய பணம் படைத்தவர்கள் நமதூரில் இருந்தாலும் அவர்கள் தொழில் சாலைகள் ஏற்படுத்தி நமதூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியங்கள் கொண்டவர்களாக இல்லையே என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதாசாரதில்தான் அந்த தொலை நோக்கு பார்வை இருப்பதாக நான் உணர்கிறேன்.
மாமா மாதிரி செல்வாக்கும் சொல்வாக்கும் செயல்வாக்கும் படைத்தவர்கள் ஊர் வரும்போது இந்த யோசனையை ஒரு கருத்தரங்கு நடத்தி ஊக்குவித்தால் அது கைகூடலாம். தக்வா காயல்நல மன்றம் முறைப்படுத்தியுள்ள சில தீர்மானங்கள் செயல்வடிவம் பெற்றால் நமதூரில் நடைபெறும் வாகன விபத்துக்கள் பெரிதும் தவிர்க்கப்படலாம்.
விழிப்புணர்வு நிறையவே தேவைப்படுகிறது. குறிப்பாக திருமண விழாக்கள், மரணம் சம்பவித்த வீடுகள் இங்கெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் அவைகள் நடத்தி முடிக்கப்படுவதில்லை. நமதூர் மக்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் தடம் பதித்தவர்கள் இங்கு வந்தவுடன் நேரம் தவறாமை என்பதை காற்றில் பறக்க விட்டு விடுகிறார்கள். நேரத்தின் அருமை சிதறடிக்கப்படுகிறது. ஏதோ வேலை இல்லாதவர்கள் திருமணத்துக்கு வருவதுபோல் நினைக்கிறார்கள். காலை 9 மணிக்கு நிகாஹ் என்று அழைப்பிதழில் அச்சடித்து விட்டு 10.30 மணிக்கு மாப்பிள்ளை அதுவும் வெளி நாட்டில் உயர் பதவியில் இருப்பவர், பைத்துடன் ஊர்வலம் வருகிறார்.
மரண வீட்டில் மய்யித் மாலை 4.30க்கு நல்லடகதுக்காக மையவாடிக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறி விட்டு சில சமயம் 4.15க்கு முன் கூட்டியே எடுத்துவிடுகிறார்கள் அல்லது ஒரு மணி நேரம் சுணக்கி விடுகிறார்கள். இவற்றை எல்லாம் தவிர்ப்பது எப்படி நடை முறை படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலரும் கை பிசைந்து கொண்டு முகம் சுளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மாற்றி யோசிக்க பழகுங்கள்.மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது. இளைஞர்களுக்கு அதிகம் பொறுப்பு கொடுங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross