நெஞ்சு பொறுக்குதில்லையே....! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[20 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25646
பள்ளிகளில் அதுவும் ஆரம்பப் பள்ளிகளில் ஆண்டு விழா எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் கலாச்சார சீரழிவு தான் சினிமாப் பாடல்களுக்கு மழலைகளை ஆடவிட்டு அழகு பார்ப்பது ரசிப்பது. சிறுமியர்கள் தன் பிஞ்சு இடுப்பை வளைத்து மார்பை நிமிர்த்தி முகத்தில் காதல், காமம், கவர்ச்சி என நவரச பாவங்களையும் வரவழைத்து ஆட்டம் போடுவதை அமர்ந்திருக்கும் அனைத்து குழந்தைகளும், பெற்றோர்களும், ஆசிரியைகளும் பார்த்து ரசித்து நாசமய்ப் போன விரசமான பாடல்வரிகளை மேற்குறிப்பிட்ட அனைவரும் முனுமுனுத்து கொண்டிருக்கும் அவல நிலை!
கல்வியை, ஒழுக்கத்தை தூய சிந்தனைகளை வித்திட்டு விதைக்கும் களமான கல்விக்கூடங்கள் ஒழுக்க மேம்பாடை உன்னத வாழ்கைக்கு உதவும் வழிகளில் எத்தனையோ நல்ல பல ஆரோக்கியமான போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு ஊன்றுகோலக இருப்பதை விட்டுவிட்டு இப்படி ஆபாச நடனத்தை பிஞ்சுகளின் அடி மனதில் நஞ்சாக விதைக்கும் கொடுமை! இதற்கு நம் சமுதாய ஆர்வலர்களும், இறை இல்லத்தின் முத்தவல்லியாக இருப்பவர்களும் தலைமை தாங்கி வழி நடத்தும் கேவலம்!
இறைமறை ஓதித் துவங்கிய நிகழ்ச்சியில் இப்படி இடுப்பை வளைத்து ஆடும் ஆட்டம் பாட்டங்கள் தேவைதானா? இச் செயலை நாம் அங்கீகரித்தால் அதன் விளைவுகளுக்குத் துணை போகும் நம்மை இறைவன் தான் மன்னிப்பானா? இதில் உச்சகட்ட கொடுமை என்னவெனில், இறுதியாக பேசிய அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ”நீங்கல்லாம் நான் எதிர்பார்த்ததை விட நல்லா ஆடி அசத்திட்டீங்க! இனி அடுத்த வருடம் இதை விட நல்லா ஆட இப்போதே ப்ராக்டீஸ் பண்ணிக் கொள்ளுங்க நானே பரிசுகளை தருவேன்” என பிஞ்சு மழலைகள் மனதில் நஞ்சைத் தூவிய கேவலம்! இதைத்தான் நம்மால் பொறுக்க முடியவில்லை!
முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் இது போன்ற பள்ளிகளில் அரங்கேறும் இத்தகைய கொடுமைகளை நாம் எத்தனை முறை தட்டிக் கேட்டாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருப்பதை எண்ணி, நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைத்து விட்டால் எனும் பாரதியின் ஆவேச வரிகள் தான் வலியாக நம் அடி மனதில் உருவாகின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross