செய்தி: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முழு மதுவிலக்கு, நீண்ட கால விசாரணைக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஏப்.02 அன்று கவன ஈர்ப்புப் பேரணி! இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிரச்சனைகளைக் கையாளுவதில் மாறுபட்ட அணுகுமுறைகள்
இருக்கத்தான் செய்யும்.அதில் தாய்ச்சபையின் மிதவாத அணுகுமுறை, இந்திய முஸ்லிம்களுக்கு உகந்தது என்று என்னைப் போன்றவர்கள் கருதுகிறோம்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கத்தியின்றி கத்தலின்றி தாய்ச்சபை
செய்துமுடித்த பணிகள் ஏராளம்.ஷாபானு வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நிலவிய அசாதாரணமான சூழ்நிலையில்,இந்திய முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைக்கு எவ்வித சேதாரமும் இன்றி,நமது உரிமைகள்
நிலைநாட்டப் பட்டதற்கு பனாத்வாலா என்ற மாமனிதரின்
புத்திபூர்வமான உரிமைக்குரல் காரணமாக அமைந்தது என்பதை
வரலாறு அறிந்த எவரும் மறுத்திட நியாயம் இல்லை.
இந்திய
முஸ்லிம்களின் வாழ்வுரிமைகளுக்கான முஸ்லிம் லீக்கின்
களப்பணிகளை நாம் அறிந்து வைக்க வில்லை என்பதே உண்மை.அதை விடுத்து முஸ்லிம் லீக் நமக்கு என்ன செய்தது
என்று எண்ணாமல்,முஸ்லிம் லீக்கிற்காக நாம் ஏதேனும் செய்வோம்.சகோதர மாநிலமான கேரளத்தை போல் இல்லையெனினும், குறைந்த பட்சம் திராவிட இயக்கங்களில்
இருந்து வெளியேறி சமுதாயக் கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு
தார்மீக ஆதரவையேனும் அளித்து விட்டு,பிறகு கேள்விகளைக் கேட்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross