Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[23 February 2013] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25692
நமதூர் முன்னோர்கள் பரந்த மனப்பான்மையுடன் ஒவ்வரு வீட்டின் அருகிலும், முன்னும், பின்னும் முடுக்கு விட்டு ஐந்து ஆறு வீடுகள் முடிந்து நான்கு பக்கமும் வெட்டை என்ற பெயரில் பெண்கள் அளவளாக வேண்டி சுமார் இருபது முப்பது அடிகள் ஒதுக்குவார்கள். அங்கே பெண்கள் மட்டும் மாலை பொழுதில் அமைதியாக பல்லாங்குழி, தாயம், புளியமுத்து கொத்துதல், கொல்லன்கொட்டை கொத்துதல் போன்ற விளையாட்டு விளையாடுவார்கள்.மற்றுமல்ல அந்த வெட்டைகள் திருமணம், போன்ற நிகழ்சிகளில் சமையல் செய்தல், மற்றும் பெண்கள் நிகழ்சிகள் நடக்கும்.
ஆனால் தற்போது முடுக்கு நான்கு அடிகூட விடுவதே இல்லை. ஏன்? ஏற்கனவே முதுகுக்கு என்று ஒதுக்கிய பகுதிகளை கூட பிளாட் உடன் சேர்த்து 20 x 40 என்ற அளவுகளில் போடுகிறார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன் போட்ட பிளாட்டுகளில் எல்லாம் முடுக்கு விட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நடை முறை எள்ளளவேனும் பேண பட வில்லை.
தயவு செய்து இனியாவது பிளாட் போடும் போது முடுக்கு விட்டு நிகழ்சிகள் நடக்க பொது பகுதி ( சமுதாய ) அமைத்தும் கொடுத்து நமதூர் மக்கள் தங்கள் வீடு நிகழ்சிகளை நடு ரோட்டை அடைத்து கொண்டு நடத்தி கொண்டிருப்பதை தவிர்க்கலாம். தயவு செய்து நில உரிமையாளர்களே சிந்தித்து நமதூர் கலாசாரம் காப்பற்றப்பட ஒத்துழைப்பு நல்குமாறு நமது முன்னோர்கள் எப்படி பரந்த மனதுடன் செயல் பட்டார்களோ அது போன்று செயல் பட வெளி நாடு வாழ் காயல் மக்களின் சார்பில் அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross