Re:...வெற்றி திருமகள் வாழ்க posted bymackie noohuthambi (kayalpatnam)[24 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25699
முதல்வர் அவர்களின் 65ஆவது பிறந்த நாள் இன்று 65 மரக்கன்றுகள் நடும் செய்தி மகிழ்ச்சியை தந்தாலும் 1971இல் நடப்பட்ட ஒரு விஷ மரம் விருட்சமாகி இன்று பட்டி தொட்டிகள் ஏழை எளியவர்கள் குடும்பங்களை சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கும் டாஸ்மாக் எனும் மதுக் கடைகள் நாடு முழுவதும் மக்களை தற்கொலை கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் என்று பலவித பஞ்சமா பாதகங்களுக்கும் ஆளாக்கி கொண்டிருப்பது வேதனையான உண்மை. அம்மா அவர்களும் அந்த வேதனை தரும் மரத்துக்கு நீரூற்றி உரமிட்டு வளர்த்துக் கொண்டிருப்பதை நல்ல இதயம் படைத்தவர்கள் கனத்த இதயத்துடன் அவதானித்து வருகிறார்கள்.
லாட்டரி சீட்டை இந்த நாட்டை விட்டு விரட்டிய முதல்வர், கட்ட பஞ்சாயத்தை ஓரம் கட்டிய முதல்வர், இந்த மதுவை ஒழிப்பதற்கு நினைத்தால் அவர்கள் பேனாவிலிருந்து கசியும் ஒரு துளி மையினால் அதை ஒழிக்க முடியும். நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள், தடை கற்களை தகர்த்து எறிந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் வெற்றி திருமகளுக்கு இது ஒரு சவால் மட்டுமல்ல, இந்த மதுவை நீங்கள் ஒழித்து, மது விலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தினால், நீங்கள் நினைக்கும் எண்ணம், நீங்கள் விரல் நீட்டி காட்டும் ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
இன்னும் சொல்ல வேண்டுமானால் அந்த சிம்மாசனத்தில் முடிசூடி அமரும் அருமையான தலைவர் நீங்களாகவும் இருக்கலாம்.
கட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா,சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இந்த சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்கரவர்த்தியடா என்று யார் யாரெல்லாமோ அமரும் அந்த சிம்மாசனம் 2014இல் உங்கள் வசமாகலாம். செய்து பாருங்கள். கோடான கோடி ஏழை தாய்மார்கள் அந்த மது விலக்கு அமுலாகும் நாளையும் அதனால் நீங்கள் பெறப்போகும் உயர் நிலையையும் எண்ணி கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். வேதனை தீர்த்தவள் விழிகளில் நிறைந்தவள் வெற்றி திருமகள் நீ என்று வாழ்த்து பாடுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross