செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம்! பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு!! தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தனக்கு தனக்குன்னா படக்கு படக்குன்னு வருதா? posted bykavimagan m.s.abdul kader (qatar)[26 February 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25750
அல்லும் பகலும் சமூகத்திற்காக உழைக்கும் சமூக ஊடகவியலாளர் மீது, மத வன்முறையைத் தூண்டுவதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இவர்கள் புகார் கொடுக்கலாம்.
நேர்மையுடன் கடமையாற்றும் தலைவி அவர்களைக் குறித்து
மாவட்ட ஆட்சியரிடம் கும்பலாய்ப் போய் புகார் கொடுத்து விட்டு,
தலையைத் தொங்கப் போட்டு பத்திரிகைகளுக்கு போஸ்
கொடுக்கலாம்.
சென்னை வரை சென்று உள்ளாட்சித் துறை
அதிகாரிகளிடம் இல்லாததை பொல்லாததை எல்லாம் அள்ளி
விட்டு, சென்னையை சுற்றிப் பார்த்து விட்டு, சுத்தவான்களாய்
ஊர் வரலாம்.
மந்திரிகளிடம் தந்திரமாய்ப் பற்றி வைக்கலாம்.
இவர்களைப் பற்றி யாரேனும் ஏதேனும் காற்று வாக்கில் கலந்து விட்டாலே போதும்... பொசுக்கென ரோஷம் வந்து விடுகிறது.
இவர்களின் இத்தனை புகார்களையும் தலைவி அவர்கள் கண்டு
கொள்ளவே இல்லை. இவர்களோ பதைக்கிறார்கள். பதறிப் போய்
வெளிநடப்பும் செய்கிறார்கள். மடியில் கனமில்லை எனில்
வழியில் பயம் எதற்கு?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross