செய்தி: நியாயவிலைக் கடையில் சலசலப்பு! பதுக்கல் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார்!! குறைந்தளவிலேயே சரக்கு வருவதாக கடைக்காரர் விளக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிவில் சப்ளை posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[08 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2583
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சரக்கு எடை போட்டு கொடுப்பதற்காக இக்கடையில் இருப்பவர்தான் அனைவரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்... என்று அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரே கூறுவதோடு மட்டுமல்லாது,
வேண்டுமென்றே எடையைக் குறைத்து மக்களுக்கு பொருள் வழங்குவது, கடை அலுவலருக்கு அவ்வப்போது ஏதேனும் கொடுத்து, அங்கு கிடைக்கும் பொருட்களை கருப்புச் சந்தையில் விற்பது, பதுக்கல் போன்ற பல குற்றச்சாட்டுக்களும் அவர்மீது கூறுகிறார்.
அது மட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஜமாஅத் நிர்வாகிகளால் இவர் பலமுறை கண்டிக்கப்பட்டிருந்தும் திருந்த ஆயத்தமாக இல்லை என்று சொல்லும்போது அவருக்கு எந்த கருணையும் காட்டாமல் அவரை நீக்குவதற்குண்டான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எடுத்து உடனே அவரை நீக்குவதுதான் நல்லது.
--------------------------------------------------
பொதுவாக நியாய விலைக்கடைகளைப் பொறுத்தவரை என்றைக்குமே மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.
மக்கள் கடைக்கார்களை குறை சொல்வார்கள் - கடைக்காரர்கள் அரசாங்கத்தை குறை சொல்வார்கள் சரியான 'சப்ளை' இல்லை என்று.
மொத்தத்தில் அலசிப்பார்த்தால் அரசாங்கத்தின் பக்கம் 10 சதவிகிதமும் ; மக்களின் பக்கம் 20 சதவிகிதமும் ; கடைக்காரரின் பக்கம் 70 சதவிகிதமும்
என்று பரவலாக எல்லோரிடமும் குறைகள் இருக்கும்.
அரசாங்கம் (சிவில் சப்ளை) :
அ. சரியான நேரத்திற்கு பொருட்களை அனுப்புவதில்லை.
ஆ. தேவையான அளவுக்கு பொருட்கள் அனுப்புவதில்லை.
இ. பொருட்களின் தரம் குறைவாக இருக்கும். இப்படியான சில, பல குறைபாடுகள்.
பொது மக்கள் :
அ. நம்ம ஊரை பொறுத்தவரை பெரும்பாலும் வீட்டில் (குடும்ப அட்டையில்) உள்ளவர்கள் ரேஷன் கடைக்கு போய் வாங்குவதில்லை,
வேலையாட்களை அனுப்பியே பொருட்களை வாங்குவார்கள் ( இது கடைக்காரருக்கு பல விதத்திலும் சாதமாகிவிடும்).
ஆ.வாங்கிய பொருள் மட்டும்தான் குடும்ப அட்டையில் பதிந்திருக்கிறார்களா? அல்லது வேறு ஏதும் கொடுத்ததாக சேர்த்து பதிந்திருக்கிறார்களா ? என்பதை பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை.(இதுவும் கடைக்காரருக்கு பல விதத்திலும் சாதகமே).
இ. இன்னும் சில வீடுகளில் ஏன் பல வீடுகளில் ரேஷன் கடையில் கொடுக்கும் பொருட்களில் ஒரு சிலதை மட்டும் வாங்கி விட்டு மற்றபொருட்களை
வீட்டில் உள்ள வேலைக்காரர்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கிறார்கள். (இதுவும் கடைகாரருக்கு மிகுந்த சாதகத்தை கொடுக்கிறது).
கடைக்காரர் :
அரசாங்கத்தினுடைய குறைபாடுகளும் மற்றும் மக்களுடைய கவனக் குறைவுகளும். கடைக்காரருக்கு பல வகையிலும் தவறு செய்வதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது.
அ. பொருட்கள் நேரம் தவறி வந்தால் - வந்த சுவடுத் தெரியாமல் கை மாறுகிறது.
ஆ.தேவையான அளவுக்கு வராமல் இருந்தால் - சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு இல்லை என்று சொல்ல வசதியாகிவிடுகிறது.
இ. சில சமயம் தரம் குறைவாக ஏதும் கொஞ்சம் வந்தால் - அந்த தரம் குறைந்ததை மட்டும் முன்னுக்கு காட்டி மற்றதை அமுக்குவது.
ஈ. வேலைக்காரிதானே! என்று சரியான பதில் கொடுப்பதில்லை(அதே நேரத்தில் வாயாடியான வேலையாட்களிடம் வால் ஆட்டுவதில்லை).
உ. வாங்காத பொருட்களை வாங்கியதாக அட்டையில் பதிந்துவிடுவது. யாரும் அட்டையை பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம்.
ஊ.இந்த வீட்டில் இன்னின்ன பொருள் வாங்க மாட்டார்கள், இது வேலைக்காரிக்குதான் என்று தெரிந்து வைத்துக்கொண்டு வேலைக்காரி இடம் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது.
--------------------------------------------------
மொத்தத்தில் சிவில் சப்ளை மற்றும் பொது மக்களுடைய சில பலகீனங்களை பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான ரேஷன் கடைக்காரர்கள் எடைக்குறைப்பு , பதுக்கல் , கடத்தல் போன்றவைகளை செய்து, மக்களுக்கு சேரவேண்டியவைகளை சூறையாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இவைகளை களைய முடியும்.
நம்ம ஊர் மக்களுக்கு நன்மைகளை செய்வதற்காக எத்தனையோ நலமன்றங்களும், சங்கங்களும் செயல்படுவதுபோல், ஊரில் அந்தந்த பகுதியில் உள்ள பொதுத்தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு "ரேஷன் கடை வினியோகத்தில்" ஏற்படக்கூடிய குறைகளை நீக்க நடவடிக்கைகளை எடுப்பது சிறந்ததாக இருக்கும். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross