செய்தி: நகர ஒற்றுமை குறித்து பதின்மர் சமாதானக் குழுவின் பரிந்துரை! நகர்மன்ற அங்கத்தினர், ஐக்கியப் பேரவை, ஊடகத்தினரிடம் கையளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக posted bymackie noohuthambi (kayalpatnam)[28 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25882
சமாதானக் குழுவுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. இப்படி ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகாதா என்று ஏங்கி நின்ற என போன்றவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இது.
கருத்து வேறுபாடுகள் மனித குலத்துக்கு இறைவன் அளித்த ஒரு நிஉமத்து என்று பெரியவர்கள் கூறுவார்கள். சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 நபித் தோழர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடுகள் இருந்தன. இமாம்கள் இறை நேச செல்வர்கள் கூட இந்த கருத்து வேறுபாட்டுக்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவர்களுடைய கருத்து வேறுபாடுகள், இந்த தீனுல் இஸ்லாத்தை மக்களிடம், மனித சமுதாயத்திடம் ஷரீஅத்துக்கு உள்பட்டு கொண்டு சேர்ப்பதில் , கண்மணி நாயகம் அவர்களின் வாக்கையும் வாழ்வையும் தம் இரு கண்களாக போற்றி அவர்கள் அடியொற்றி நடப்பதிலே மக்களை ஈடு படுத்த பயன்பட்டன.
ஆனால் துரசிர்ஷ்டவசமாக நமது கருத்து வேறுபாடுகள் உலக ஆதாயத்துக்காகவும் சொந்த சுய நலன்களை நோக்கமாக கொண்டதாகவும் இருப்பதால் நாம் சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விடியலும் இரவானால் பகல் ஒன்று வந்திடும் என்பதை சொல்கிறது என்பது போல் இந்த செய்தி வந்துள்ளது.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். நீர் வெட்டி நீர் பிரியாது என்பார்கள். நெறியூட்டி அறிவூட்டி நம்மை வளர்க்க வேண்டியவர்கள் வெறியூட்டி வளர்க்க நாம் இடம் கொடுக்காமல் இப்போது பெரியவர்கள் வகுத்து தந்த பாதையில் நமது இலக்குகளை அடைய முற்படுவோமாக. விட்டுக்கொடுத்ததால் பல சாம்ராஜ்யங்கள் அந்த நபி தோழர்களின் பாதங்களை முத்தமிட்டன என்ற வரலாறு தெரிந்தவர்கள் நாம். எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு மறுமலர்ச்சியை இந்த ஊரில் ஏற்படுத்தி, நமது உரிமைகளை வென்றெடுக்க எல்லோரும் ஒரே குரலில் ஒரே குடையின்கீழ் திரண்டு நின்று போராட அருள் புரிவானாக.
படங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ALLAAHUMMALHIMNAA MARAASHIDHA UMOORINAA VA AGHITHNAA MIN SUROORI ANFUSINAA VA MIN SAYYIAATHI AUMAALINAA......AMEEN.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross