காயல்பட்டினத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் குறித்து, அது தொடர்பானவர்களுடன் கலந்தாலோசனை செய்து, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், பதின்மர் (பத்து பேர்) கொண்ட சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழு அனைத்து தரப்பினருடனும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையில், சமாதானக் குழு பரிந்துரை ஒன்றையும் தயாரித்துள்ளது.
அப்பரிந்துரையை, காயல்பட்டினம் நகர்மன்ற அங்கத்தினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இணையதள ஊடகங்களின் நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி, 27.02.2013 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சமாதானக்குழு உறுப்பினர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கூட்டத்தின் நோக்கம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச் செயலாளரும் - சமாதானக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில் அதன் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்கமாக பரிந்துரையைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான பரிந்துரையை ஹாஜி எம்.எம்.உவைஸ் வழங்க, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள், இணையதள ஊடகங்களின் பிரதிநிதிகளிடம் பரிந்துரை பிரதிகள் வழங்கப்பட்டது. பரிந்துரை வாசகங்கள் வருமாறு:-
சமாதானக்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூற, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹூத்தீன் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், சமாதானக் குழு அங்கத்தினர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், நகர்மன்ற அங்கத்தினர், இணையதள ஊடகங்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |