கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, இம்மாதம் 17ஆம் தேதியன்று, பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. பொதுக்குழுக் கூட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அன்று மாலையில் நடைபெற்ற - சிறார், குழந்தைகள் பங்கேற்ற குர்ஆன் மனனப் போட்டி, அனைவர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, இம்மாதம் 17ஆம் தேதியன்று, பெங்களூரு நகரில் நடைபெற்றது. காலை வேளையில் நடைபெற்ற கூட்ட நிகழ்வுகள் குறித்த விரிவான செய்தியை ஏற்கனவே நாங்கள் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, அன்று மாலையில் குழந்தைகள் மற்றும் கலந்துகொண்டோர் பங்கேற்ற குர்ஆன் மனனம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
சிறார் - மழலையர் விளையாட்டுப் போட்டிகள்:
உணவு இடைவேளையைத் தொடர்ந்து, மதியம் 03.00 மணியளவில் மழலையருக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கின.
உற்சாகக் குளியல்:
அதே நேரத்தில், நிகழ்விடமான பசுமைத் தோட்ட வீட்டின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குளியல் தொட்டியில், இளைஞர்கள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
Spoon & Lemon:
சிறார் போட்டியின் துவக்கமாக, வாயில் கரண்டியைப் பிடித்து, அதன் மீது எலுமிச்சைப் பழத்தைத் தாங்கியவாறு, அது கீழே விழாமல் - குறிப்பிட்ட எல்லையை நடந்து கடக்கும் விதிமுறையைக் கொண்ட Lemon & Spoon போட்டி நடைபெற்றது.
Balloon Fighting:
அதனையடுத்து, ஒவ்வொரு போட்டியாளரும் தனது முதுகுப் புறத்தில் பலூனைக் கட்டியவாறு, தன் பலூன் உடையாமல் பாதுகாத்து, சக போட்டியாளரின் பலூனை உடைக்கும் Balloon Fighting போட்டி நடைபெற்றது.
இவ்விரு போட்டிகளையும், சிறப்பு விருந்தினர் வழக்குறைஞர் துளிர் அஹ்மத் தலைமையில், விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் வழிநடத்தினர்.
திருமறை குர்ஆன் மனனப் போட்டி:
தொடர்ந்து, திருக்குர்ஆனின் சிற்சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி நடைபெற்றது. (முன்னதாக, மனனம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் குறித்து, 30 நாட்களுக்கு முன்பாகவே போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.)
இப்போட்டியை சிறப்பு விருந்தினர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் மவ்லவீ முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் ஆகியோர் வழிநடத்தினர்.
மழலையர் நினைவாற்றல் போட்டி:
அதனைத் தொடர்ந்து, மழலையர் நினைவாற்றல் போட்டி நடைபெற்றது. மேசை மீது சுமார் 20 பொருட்கள் கிடத்தப்பட்டு, 2 நிமிடங்களுக்கு அவற்றை போட்டியில் பங்கேற்கும் மழலையர் பார்வையிட வேண்டும். பின்னர், ஒவ்வொரு மழலைப் போட்டியாளருக்குமென தனியாக நியமிக்கப்பட்ட நடுவரிடம் தான் பார்த்த பொருட்களை ரகசியமாக சொல்ல, அவர் அவற்றை எழுதியெடுத்துக்கொள்வார். அதிக பொருட்களை நினைவாற்றலுடன் சொல்லும் மழலையர் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இப்போட்டியில், நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து மழலைச் செல்வங்களும் பங்கேற்றனர்.
இவ்வாறாக சிறார் மற்றும் மழலையர் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.
அனைவருக்குமான Musical Ball போட்டி:
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பங்கேற்கும் Musical Ball போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இப்போட்டியின் அசைபட (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக!
முன்னதாக, காலை வேளையில் மகளிருக்கான “சமையல் பொருட்களை நுகர்ந்தறியும் போட்டி” நடத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அஸ்ர் தொழுகை:
அதனைத் தொடர்ந்து, அஸ்ர் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்து அனைவருக்கும் தின்பண்டங்களுடன் தேனீர் வழங்கியுபசரிக்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சி:
பின்னர், பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக சிறார் பங்கேற்ற திருமறை குர்ஆன் மனனப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
முதற்பரிசு:
ஃபாத்திமா ஷம்சுல்லுஹா
த.பெ. பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன்
இரண்டாவது பரிசு:
மர்யம் ருக்கையா
த.பெ. மக்கீ இஸ்மாஈல்
மூன்றாவது பரிசு:
அப்துல்லாஹ் ஸாஹிப்
த.பெ. பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன்
அடுத்து, Balloon Fighting போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
முதற்பரிசு:
முஹம்மத் வாஃபிக்
த.பெ. முஹம்மத் இப்றாஹீம் (ஹனீவெல்)
இரண்டாவது பரிசு:
ஃபாத்திமா ஷம்சுல்லுஹா
த.பெ. பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன்
மூன்றாவது பரிசு:
ஹம்து ஹாஃபியா
த.பெ. மக்கீ இஸ்மாஈல்
அடுத்து, மழலையர் நினைவாற்றல் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
முதற்பரிசு:
ஹம்து ஹாஃபியா
த.பெ. மக்கீ இஸ்மாஈல்
இரண்டாவது பரிசு:
முஹம்மத் வாஃபிக்
த.பெ. முஹம்மத் இப்றாஹீம் (ஹனீவெல்)
மூன்றாவது பரிசு:
நவ்ஃப் நிஸா
த.பெ. ஜபரூத் மவ்லானா
அடுத்து, Spoon & Lemon போட்டியில் வென்ற சிறாருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
முதற்பரிசு:
முஹம்மத் வாஃபிக்
த.பெ. முஹம்மத் இப்றாஹீம் (ஹனீவெல்)
இரண்டாவது பரிசு:
ஹம்து ஹாஃபியா
த.பெ. மக்கீ இஸ்மாஈல்
மூன்றாவது பரிசு:
ஃபாத்திமா ஷம்சுல்லுஹா
த.பெ. பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன்
மழலையர் பிரிவிற்கான பரிசு:
ஃபாத்திமா ஸமீஹா
த.பெ. முஹம்மத் இப்றாஹீம் (ஹனீவெல்)
பின்னர், மகளிருக்கான - சமையல் பொருட்கள் நுகர்ந்தறியும் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
முதற்பரிசு:
மர்யம்
(உறுப்பினர் மக்கீ இஸ்மாஈலின் தாயார்)
இரண்டாவது பரிசு:
மொகுதூம் ஃபாத்திமா
(உறுப்பினர் ஹபீப் [Accenture] மனைவியார்)
இப்பரிசுகளை, ஹாஜ்ஜா கே.ஏ.ஆர்.ஹாஜரா புகாரீ வெற்றியாளர்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பெரியவர்களுக்கான Musical Ball போட்டியில் இறுதியில் வென்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்: எஸ்.கே.ஸாலிஹ்
இப்பரிசை, உறுப்பினர் ஜபரூத் மவ்லானா வழங்கினார்.
அடுத்து, இளைஞர்களுக்கான Musical Ball போட்டியில் இறுதியில் வென்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்: வாவு முஹம்மத்
இப்பரிசை, பெங்களூரு காயல் நல மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் முன்னாள் தலைவர் அப்துர்ரஹீம் அவர்களுக்கு, முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் ஆலிம் அவர்களும், இந்த பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியை நடத்த இடமளித்து உதவிய மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினருக்கு, மன்றத்தின் முன்னாள் தலைவர் அப்துர்ரஹீம்,
இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தோருக்கு எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
பின்னர், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு நிதி திரட்டுமுகமாக, விருப்பப்பட்டோருக்கு உண்டியல் வழங்கப்பட்டது. துளிர் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் அவற்றை வழங்கினார்.
நன்றியுரைக்குப் பின், ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் துஆவுடன் நிகழ்வுகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், சிறப்பழைப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கியுபசரிக்கப்பட்டது.
மாலை 06.00 மணியளவில், அனைவரும் தத்தம் வாகனங்களில் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாக்கம்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் (துணைத்தலைவர்)
M.M.சுலைமான் (செயலாளர்)
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான் (ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்)
இப்றாஹீம் நவ்ஷாத் (ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்)
வடிவமைப்பு & படங்கள்:
S.K.ஸாலிஹ் |