காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டு காலம் பிலாலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற - குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த தாவூத் லெப்பை, 27.02.2013 புதன்கிழமை இரவு 08.00 மணியளவில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
7. posted bySUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI)[28 February 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25854
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"
எல்லாம் வல்ல நாயன் , மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . .
அவர்கள் பிரிவால் வாடி நிற்கும், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். எனது சலாதினை குடும்பத்தினர் அனைவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் posted byNIZAR (KAYALPATNAM)[28 February 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25856
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
எங்கள் பள்ளியில் நிறைந்த வருடங்கள் சிறப்பாக பணியாற்றிய தாவுது லெப்பை என்று அழைக்கப்படும் முஅத்தின் அவர்கள் வபாத் செய்தி முஹல்லா வாசிகள் அனைவருக்கும் வருத்தத்தை அளித்திருக்கும். எல்லோரோடும் இனிமையாக பழகும் குணம் கொண்ட இவரை ஜமாத்தில் தெரியாதவர்களே இல்லை எனலாம். தன்னுடைய முழு வாழ்க்கையும் ஓய்வின்றி இறை பணிக்காக அர்ப்பணித்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,
மர்ஹூம் அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..
அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் அவருடைய மகன் கித்று மற்றும் மருமக்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,
9. இன்னாலில்லாஹி ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்)[28 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25860
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்.
13. Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[28 February 2013] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25866
எங்கள் பள்ளி முன்னாள் பிலால் தாவூத் லெப்பை அவர்கள் வபாத் அடைந்ததை அறிந்து கவலையுற்றோம்.
அன்னார் முஅதினாக மற்றுமல்ல. இம்மாம் அவர்கள் வராத நேரத்தில் இமாமாகவும், துப்புரவு பணியாளர் வராத நேரத்தில் முகம் சுளிக்காது துப்புரவு செய்பவராகவும், ஊரிலே விரல் விட்டு என்ன கூடிய நபர்களில் மையத் வேலை அனைத்தும் தெரிந்த ஒருவராக இருந்தார்கள்.
ஒரு சமயம் மையத்து குழி தோண்ட ஆள் கிடைக்காத நேரத்தில் அவர்களே குழி தோண்டினார்கள். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பாளி. மற்றுமன்று அவர்கள் தல்கீன் ஓதும் போது மிக உருக்கமாக ஒதுவார்கள். கேட்கும் நமக்கு எல்லாம் மறுமையின் பயம் வரும். அந்த அளவிற்கு உருக்கமாக ஓதுவார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தன்னை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக அருள் புரிவானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் சகோ. கிதுரு முஹம்மத் மற்றும் குடும்பத்தினர் யாவர்க்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்
M.E.L. நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் குருவித்துறை முஹல்லா வாசிகள்
ரியாத்
சவுதி அரேபியா
16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.......... posted byS.K.Shameemul Islam (Chennai)[28 February 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 25870
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் கப்ர் வாழ்வை இலேசாக்கி மறுமையில் உயர் பதவிய கொடுத்தருள்வானாக.
பாங்கொலியை உயர்ந்த சப்தத்தில் எழுப்பி ஆழ்ந்த நித்திரையில் உள்ளவர்களையும் அதிரச் செய்யும் கநீறேன்ரக் குரலுக்குச் சொந்தக்காரர்.
சகோதரர் நுஸ்கி சொன்னது போல தனது பணியை மட்டுந்தான் என்றில்லாமல் அனைத்துப் பணிகளையும் செய்யும் பழக்கம் அவர்களிடம் இருந்தது.
அதான் எழுப்புபவர்கள் மறுமை நாளில் நீண்ட கழுத்துடன் எழுப்பப்படுவார்கள் என ஒரு ஹதீஸ் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அல்லாஹ் அவர்களுக்கு உயர் பதவிகளையும் ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் தங்கிடும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக.
அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
18. إنـا لله وانا اليــــــه راجعــــــــــون posted bySyed Muhammed Sahib SYS (Dubai.)[28 February 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25883
22. எளிமையே உருவானவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[01 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25892
தோற்றல் எளிமை... உரக்கப் பேசி பழக்கமற்றவர்... அனைவரோடும் அன்பாகவும், மரியாதையாகவும் பழகி வந்தவர்...
ஒலிபெருக்கி இல்லாத கால கட்டத்திலும், சொளுக்கார் தெரு, தீவுத்தெருவுக்கு நடுவிலிருக்கும் பள்ளியின் மேற்பகுதியிலிருந்து அவர் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பொலி (அதான்) கொச்சியார் தெரு, கடற்கரை வரை கேட்கும். அவ்வளவு கம்பீரமான - பிசிறில்லாத குரல் வளம்...
நுஸ்கி காக்கா சொன்னது போல, அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் தல்கீன் ஓதுவதை பொருளறிந்து கேட்போரை மறுவுலக வாழ்விற்கே கொண்டு சென்று விடுவார்... அவ்வளவு உருக்கம்!
சுமார் 35 ஆண்டு காலம் எங்கள் குருவித்துறைப் பள்ளியில் புனித பிலால் பணியை குறையின்றி செய்து ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தில் தன் மீது யார் கோபப்பட்டாலும் கூட பதிலுக்கு கோபத்தைக் காண்பித்திராதவர்.
வல்ல அல்லாஹ் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
பிலாலாக (முஅத்தினாக) உலகில் திகழ்ந்தவருக்கு மறுமையில் என்னென்ன தகுதிகளெல்லாம் தரப்படுமோ அவையத்தனையையும் கருணையுள்ள அல்லாஹ் இந்த நல்லவருக்கு வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
அனைவருக்கும் எமதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
24. ஹய்ரிஹி வ ஷர்ரிஹி மினல்லாஹி தாலா..... posted bys.s.md meerasahib (TVM)[04 March 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 25993
அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கள் பள்ளியின் நீண்ட கால முஅத்தின் தாவூது லெப்பை அவர்களின் மரண செய்தி அறிந்து கவலையுற்றேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
மேலே... குறிப்பிட்ட நண்பர்கள் சொன்னது போன்று பவர் கட்டா இருந்தாலும் அவர்களின் பாங்கொலி பவர்புல்லா இருக்கும். அதே போன்று அவர்கள் ஓதும் தல்கீனை கேட்டால்.... நம்மை அல்லாஹ்வின் முன்னே... நிறுத்திவிடும். மேலும் மரண செய்தி கேட்டு இரவு எத்தனை மணியானாலும் சங்கடப்படாமல் வந்து ஒத்துழைப்பவர்கள். .
للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة
அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross