காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில், ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 01 முதல் 14 வரை, மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவாக கந்தூரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
அதனடிப்படையில், நடப்பாண்டு கந்தூரி நிகழ்ச்சிகள் இம்மாதம் 12ஆம் தேதியன்று துவங்கி, 24ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நாட்களில் தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், மவ்லித் மஜ்லிஸும் நடத்தப்பட்டது.
15.02.2013 தேதி வெள்ளிக்கிழமை முதல் 23.02.2013 சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 08.45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
15.02.2013 வெள்ளிக்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, “தவ்ஹீத், ரிஸாலா, நுபுவ்வா, விலாயா - இவற்றின் கண்ணோட்டமும், கருத்தோட்டமும்” என்ற தலைப்பிலும்,
16.02.2013 சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, “இஸ்லாமும், ஆன்மிகமும்” என்ற தலைப்பிலும்,
17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, “அண்ணலார் உகந்த ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்” என்ற தலைப்பிலும்,
18.02.2013 திங்கட்கிழமையன்று, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, “இறைநேசர்களிடம் நாம் பெற வேண்டியவை” என்ற தலைப்பிலும்,
19.02.2013 செவ்வாய்க்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ எம்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ ஆகியோர், “நீதியின் சிகரம் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்; வாரி வழங்கிய வள்ளல் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்” என்ற தலைப்புகளிலும்,
20.02.2013 புதன்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் எம்.செய்யித் முஹம்மத் மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத் ஆகியோர், “அறிவின் திலகம் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்; ஸஹாபிகளின் அரசியலும் ஓர் ஆன்மிகமே” ஆகிய தலைப்புகளிலும்,
21.02.2013 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, “குத்புல் அக்தாப் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சரிதை” என்ற தலைப்பிலும்,
22.02.2013 வெள்ளிக்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, மவ்லவீ கலீஃபத்துல் காதிரீ எல்.ஓ.எம்.முஹம்மத் அலீ மஹ்ழரீ ஆகியோர், “கருணை காட்டும் காருண்ய மார்க்கம்” என்ற தலைப்பிலும்,
23.02.2013 சனிக்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, குத்புல் அக்தாப் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவு நாள் கந்தூரி சிறப்புரையும் வழங்கினர்.
24.02.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின், மவ்லவீ கலீஃபத்துல் காதிரீ எல்.ஓ.எம்.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றது.
அன்றிரவு 08.30 மணி முதல் 09.30 மணி வரை துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. உலக சமாதானம், ஊர் ஒற்றுமை, கொள்கை பிடிப்பு, நோயற்ற வாழ்வு, மனித நேய மலர்ச்சி, குடும்ப உறவுகள், மார்க்கக் கல்வியின் மீது ஆர்வம் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ இறைஞ்சினார்.
இந்நிகழ்வுகள் அனைத்திலும், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு மஹ்ழராவையொட்டிய தென்பகுதியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
25.02.2013 திங்கட்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஃபாத்திஹா துஆவுடன் நேர்ச்சை வினியோகம் துவங்கி, காலை 08.30 மணிக்கு நிறைவடைந்தது.
கந்தூரி விழா நிகழ்ச்சிகளனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியில் நேரலை செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஹ்ழரா நிர்வாகிகளும், கந்தூரி கமிட்டி நிர்வாகிகளுமான ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்களில் உதவி:
K.M.T.சுலைமான் |